ஐஸ்வர்யா ராய் தான் வேணும்... பிடிவாதத்தால் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல ஹீரோ

First Published May 5, 2024, 3:18 PM IST

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ரிலீஸ் ஆகி 24 ஆண்டுகள் ஆகும் நிலையில், அப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் சான்ஸை மிஸ் பண்ணிய நடிகர்கள் பற்றி பார்க்கலாம்.

Kandukonden Kandukonden

ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். இப்படத்தின் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். அவருடன் மம்முட்டி, தபு, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார். வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு நடிகர் அஜித்தின் கெரியரில் ஒரு மாஸ்டர் பீஸ் படமாகவும் அமைந்தது.

24 years of kandukonden kandukonden movie

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் வெற்றிக்கு அதில் இடம்பெற்ற பாடல்களும் ஒரு முக்கிய காரணம். குறிப்பாக இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஷங்கர் மகாதேவன் பாடிய ‘என்ன சொல்ல போகிறாய்’ பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதோடு காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பாடலுக்கு பாடகர் ஷங்கர் மகாதேவனுக்கு தேசிய விருதும் கிடைத்தது. அவர் வாங்கிய முதல் தேசிய விருது இதுவாகும்.

இதையும் படியுங்கள்... Pradeep Ranganathan: இதுதான் அந்த ஃபயரான டைட்டிலா! லவ்டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபட தலைப்பு அறிவிப்பு

kandukonden kandukonden movie hero

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட கண்டுகொண்டேன் கண்டுகொண்டே திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. இதனைக் கொண்டாடும் விதமாக 24 years of kandukondain kandukondain என்கிற ஹேஷ்டேக்கும் எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல நடிகர் பற்றிய தகவலை தற்போது பார்க்கலாம்.

kandukonden kandukonden movie aishwarya Rai

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் நடித்த மனோகர் கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ராஜீவ் மேனன் முதலில் அணுகியது நடிகர் பிரசாந்தை தானாம். ஆனால் பிரசாந்த் அப்படத்தை மிஸ் பண்ணியதற்கான சீக்ரெட்டை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அதன்படி அந்த காலகட்டத்தில் பிரசாந்த் உச்ச நடிகராக வலம் வந்ததால் அவரின் கால்ஷீட் மற்றும் அவருக்காக கதை கேட்பது போன்றவற்றை அவரின் தந்தை தியாகராஜன் தான் செய்து வந்தாராம்.

Prashanth reject Kandukonden Kandukonden movie

அப்படி கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் பிரசாந்தை நடிக்க வைக்க அவர் தியாகராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது, பிரசாந்துக்கு யார் ஜோடி என தியாகராஜன் கேட்க, ராஜீவ் மேனன் தபு என கூறி இருக்கிறார். உடனே ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக போட்டால் தான் பிரசாந்த் நடிப்பார் என சொல்லிவிட்டாராம் தியாகராஜன். அவருக்காக ஹீரோயினை மாற்றமுடியாது என கூறிவிட்டு அவருக்கு பதில் அஜித்தை ராஜீவ் மேனன் நடிக்க வைத்ததாகவும், அந்த நேரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதாகவும் செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படியுங்கள்...நல்ல வேள அவர் நடிக்கல... கில்லி படத்தில் பிரகாஷ் ராஜுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த டாப் ஹீரோவின் தந்தையா?

click me!