MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Pradeep Ranganathan: இதுதான் அந்த ஃபயரான டைட்டிலா! லவ்டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபட தலைப்பு அறிவிப்பு

Pradeep Ranganathan: இதுதான் அந்த ஃபயரான டைட்டிலா! லவ்டுடே ஹீரோ பிரதீப் ரங்கநாதனின் அடுத்தபட தலைப்பு அறிவிப்பு

ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கு புதிய படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 05 2024, 02:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Pradeep Ranganathan

Pradeep Ranganathan

ஜெயம் ரவி நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக முத்திரை பதித்த அவர், அடுத்த படத்திலேயே ஹீரோவாக அறிமுகமானார். அந்த வகையில் அவர் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் அதிரி புதிரியான வெற்றியை பதிவு செய்ததோடு, அவருக்கு ஹீரோவாக நடிக்க அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

24
Pradeep Ranganathan, Vignesh Shivan

Pradeep Ranganathan, Vignesh Shivan

லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின்னர் படம் இயக்கும் வேலையை ஓரங்கட்டி வைத்துவிட்டு முழுநேர ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார் பிரதீப். அவர் நடிப்பில் தற்போது எல்.ஐ.சி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சீமான் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... Dharsha Gupta : அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய... சைடு போஸில் செக்ஸி லேடியாக போஸ் கொடுத்த தர்ஷா குப்தா

34
Ashwath, Pradeep Ranganathan

Ashwath, Pradeep Ranganathan

எல்.ஐ.சி படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடிக்க உள்ள மற்றொரு படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. அதன்படி அப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளதாகவும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அஸ்வத் மாரிமுத்து இதற்கு முன்னதாக ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். அப்படம் ரிலீஸ் ஆகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது தனது இரண்டாவது படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க உள்ளார்.

44
pradeep ranganathan Next Movie Dragon

pradeep ranganathan Next Movie Dragon

இப்படத்திற்கான டைட்டில் குறித்த அறிவிப்பை இன்று காலை 9 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்திருந்த படக்குழு, அந்த நேரத்தில் அறிவிக்கவில்லை. பின்னர் ஒருவழியாக பிற்பகல் 2 மணியளவில் தான் அப்படத்தின் டைட்டிலை அறிவித்தனர். அதன்படி அப்படத்திற்கு டிராகன் என பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படத்தில் பிரதீப் உடன் மிஷ்கின், யூடியூப் பிரபலங்களான விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் ஆகியோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க உள்ளார். பிரதீப் ரங்கநாதன் இதுவரை ஹீரோவாக நடித்த லவ் டுடே, எல்.ஐ.சி, டிராகன் ஆகிய மூன்று படங்களுக்கும் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Gabriella Sellus : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா தொடங்கிய புது பிசினஸுக்கு கிடைக்கும் செம்ம ரெஸ்பான்ஸ்..!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதீப் ரங்கநாதன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved