College : அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் எப்போது விநியோகம்.? தேதி அறிவித்த உயர்கல்வித்துறை

By Ajmal KhanFirst Published May 5, 2024, 3:20 PM IST
Highlights

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அரசு கலை மற்றும் கல்லூரியில் சேர விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுவதற்கான தேதியை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்ப கட்டணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரியில் விண்ணப்பிக்க அழைப்பு

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை தேர்வு முடிவு வெளியிடப்படவுள்ளது. இதே போல பள்ளி படிப்பை முடிந்த மாணவர்கள் கல்லூரியில் சேரும் வகையில், முதலாம் ஆண்டு கலை அறிவியல் படிப்பிற்கான விண்ணப்பம் விநியோகம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

TN 12th Exam Result : நாளை 12ஆம் வகுப்பு ரிசல்ட்.! எத்தனை மணிக்கு பார்க்கலாம்.? எந்த இணையதளத்தில் பார்க்கலாம்

விண்ணப்பக் கட்டண விவரம்

விண்ணப்பக் கட்டணம் ஒரு மாணவருக்கு : ரூ.48/-

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

விண்ணப்பக் கட்டணம் SC/ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை.

பதிவுக் கட்டணம் : ரூ.2/-

கட்டணம் செலுத்தும் முறை

 விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card / Credit Card / Net Banking / UPI மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம். இணையதளம் வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிச் சேர்க்கை உதவி மையங்களில்  "The Director, Directorate of Collegiate Education, Chennai 15" என்ற பெயரில் 06/05/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாக அல்லது நேரடியாகச் செலுத்தலாம். கால மாணவர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் அட்டவணையை மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.  மேலும் தகவல் தொடர்பு எண்: 044-24343106 / 24342911 அழைக்குமாறும் உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

click me!