Foods for Hemoglobin : 10 நாளில் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க 'இத' மட்டும் சாப்பிடுங்க..!!

First Published Mar 28, 2024, 12:41 PM IST

உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

இப்போதெல்லாம், பிஸியான வாழ்க்கையில் நாம் வாழ்வதால்,  உடல்நலம் தொடர்பான பல பிரச்சனைகள் வருவது பொதுவானவை. இந்த பிரச்சனைகளில் ஒன்று தான் ஹீமோகுளோபின் குறைபாடு. உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால், நீங்கள் பல கொடிய நோய்களுக்கு பலியாகலாம். 

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்கள் முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்க வேலை செய்கின்றன. உடலில் அதன் குறைபாடு ஏற்படும் போது,   சோர்வு, பலவீனம், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ஹீமோகுளோபின் அதிகரிக்க என்னென்ன பொருட்களை சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்: உடலில் உள்ள இரத்த சோகையை நீக்க , வைட்டமின் சி நிறைந்த பொருட்களை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு பழம், எலுமிச்சை, கேப்சிகம், தக்காளி, திராட்சை, பெர்ரி போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அவற்றில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், இது ஹீமோகுளோபினை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

டேட்ஸ்: பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, இதில் தாமிரம், செலினியம், மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. அவை இரத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி எலும்புகளையும் பலப்படுத்துகிறது.

இதையும் படிங்க: Hemoglobin: ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் அற்புத பானத்தை தயாரிப்பது எப்படி?

மாதுளை பழம்: மாதுளையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் புரதங்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. மேலும் இந்த பழத்தை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். எனவே, உடலில் இரத்தத்தை நிரப்ப, மாதுளை ஜூஸை தினமும் குடியுங்கள்.

இதையும் படிங்க: ரத்த உற்பத்தியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

பீட்ரூட்: இரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக பீட்ரூட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது தவிர, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்தும் பீட்ரூட்டில் உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!