Thyroid : தைராய்டு பிரச்சனையா..? அப்ப இந்த 3 பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்கள்..ரொம்பவே நல்லது!

First Published Apr 27, 2024, 5:39 PM IST

தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 3 பழங்கள். அவை என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாங்க..
 

ஒருவருக்கு தைராய்டு இருந்தால், அது  ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இந்த ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், இந்த பிரச்சினைக்கு எவ்வளவுதான் மருந்துகளை எடுத்து கொண்டாலும் அதை உடனே குறைக்க முடியாது. 

ஹைப்போ தைராய்டிசம் எடை அதிகரிப்பு, மெதுவான இதயத் துடிப்பு மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். இதற்கு மருந்து மட்டும் போதாது. வாழ்க்கை முறையிலும் சிறிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதாவது தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள் தங்கள் அன்றாட உணவில் சில வகையான பழங்களை சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. அவை..

பெர்ரி: இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் தைராய்டு பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தைராய்டு செயல்பாட்டை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதுபோல ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் நெல்லிக்காய்கள் உடலில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பற்றாக்குறையை ஈடுசெய்ய உதவுகிறது. அதாவது, தைராய்டு காரணமாக ஏற்படும் சோர்வு மற்றும் எடை அதிகரிப்பையும் இவை தடுக்கும்.

ஆப்பிள்கள்: ஆப்பிள்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இந்த பழம் தைராய்டு சுரப்பியை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாப்பது மட்டுமின்றி, நீரிழிவு, கொழுப்பு, உடல் பருமன் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களையும் தடுக்கிறது.

இதையும் படிங்க:  தைராய்டு இருக்கா? அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க...?!

அவகேடோ: இந்த பழத்தில் வைட்டமின் கே, வைட்டமின் சி, வைட்டமின் பி5, பி6 வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம், ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை பராமரிக்கும். 

இதையும் படிங்க: தினமும் இந்த தண்ணீரை குடித்தால் போதும்- தைராய்டு சட்டென குறைந்துபோகும்..!!

அதுபோல், சோயா பீன்ஸ் மற்றும் சோயா உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை தைராய்டு பிரச்சனைகளை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!