MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • தைராய்டு இருக்கா? அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க...?!

தைராய்டு இருக்கா? அப்போ கண்டிப்பா இந்த உணவுகளை சாப்பிடுங்க...?!

தைராய்டு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக சிலருக்கு திடீரென உடல் எடை கூடும். இது தவிர, இனப்பெருக்க ஆரோக்கியம், முடி மற்றும் தோல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. அதை கட்டுக்குள் வைத்திருக்க, சில உணவுகளை உண்ண வேண்டும். 

2 Min read
Author : Kalai Selvi
Published : May 01 2023, 09:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தைராய்டு சுரப்பி ஒரு முக்கியமான உறுப்பு. வளர்சிதை மாற்றம் மற்றும் பிற உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. ஹைப்போ தைராய்டிசம் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் போன்ற தைராய்டு பிரச்சனைகள் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

உணவுக்கும் தைராய்டுக்கும் என்ன சம்பந்தம்?

நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்? எதைச் சாப்பிடக்கூடாது என்பதைப் பொறுத்தது. நாம் உண்ணும் உணவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உங்களுக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், பிசிஓஎஸ் போன்ற நோய்கள் இருந்தால், சில வகை உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இந்தப் பிரச்சனைகளை அதிகப்படுத்துகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, சில உணவுகள் தைராய்டு சுரப்பியில் இருந்து வெளியாகும் தைராய்டு ஹார்மோன்களைக் கட்டுப்படுத்துகின்றன. அவைகள் என்னென்ன உணவு என்று இங்கு பார்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

கடல் உணவு:
மீன் மற்றும் பாய்மர மீன் போன்ற கடல் உணவுகள் அயோடினின் சிறந்த மூலமாகும். தைராய்டு சுரப்பி சரியாக செயல்பட இது ஒரு அத்தியாவசிய கனிமமாகும். பாய்மர மீன் அயோடின் இயற்கை வளமான மூலமாகும். அயோடின் தைராய்டு சுரப்பியில் குவிந்துள்ளது. இது தைராய்டு ஹார்மோன்களை உருவாக்க நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது. அயோடின் குறைபாட்டால் தைராய்டு சுரப்பி வீக்கமடைகிறது.
 

38

செலினியம் உணவு மற்றும் நட்ஸ்:
பிரேசில் நட்ஸ், ப்ரக்கோலி, அரிசி, ஆளி விதைகள், மஷ்ரூம், பருப்பு வகைகள் போன்ற செலினியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இந்த உணவில் உள்ள செலினியம் ஃப்ரீ ரேடிக்கல்ஸை அகற்றி உடலில் நோயெதிர்ப்பு செயல்பாட்டை வலுப்படுத்துகிறது.

48

தானியங்கள்:
முழு தானியங்களான பழுப்பு அரிசி போனவற்றில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை தைராய்டு செயல்பாட்டிற்கு உதவும். ஓட்ஸ், பிரவுன் ரைஸ், முளைகள், முளைத்த தானிய ரொட்டி மற்றும் குயினோவா ஆகியவற்றை உண்ணுங்கள், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், தைராய்டு சுரப்பியை ஆதரிக்க உதவும்.

58

கீரைகள்:
கீரை மற்றும் கோஸ் போன்ற கீரைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை தைராய்டு சுரப்பியை சரியாகச் செயல்பட உதவுகின்றன.

68

பருப்பு வகைகள்:
நிபுணர்களின் கூற்றுப்படி, பருப்பு வகைகள் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான சிறந்த மூலமாகும். பருப்பு வகைகளிலும் இரும்புச்சத்து உள்ளது. தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தை பராமரிக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

இதையும் படிங்க: கோடையில் ஆரோக்கியமாக இருக்கணுமா? அப்போ இந்த வழிமுறைகளை பின்பற்றுங்க...!!

78

முட்டைகள்:
முட்டை அயோடின் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். இவை இரண்டும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. அவை செலினியம், வைட்டமின் 'டி' மற்றும் தைராய்டு ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும் பிற ஊட்டச்சத்துக்களையும் கொண்டிருக்கின்றன.

88

இனிப்பு உருளைக்கிழங்கு:

இனிப்பு உருளைக்கிழங்கு வைட்டமின் 'ஏ' மற்றும் வைட்டமின் 'சி' ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். இவை இரண்டும் தைராய்டு ஆரோக்கியத்திற்கு முக்கியமானவை. இவற்றில் நார்ச்சத்தும் அதிகம். ஆனால் கலோரிகள் குறைவு.

 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chettinad Onion Rasam : வீடே மணக்கும் செட்டிநாடு வெங்காய ரசம்.. ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே செய்து அசத்தலாம்!
Recommended image2
வழக்கமான சட்னி சாப்பிட்டு சலிச்சு போச்சா? 10 நிமிடத்தில் சுவையான 'காரைக்குடி ஸ்பெஷல்' சட்னி!
Recommended image3
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved