Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்..!

First Published Sep 7, 2023, 11:57 AM IST

பல்வேறு மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது 

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004ம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம்  உள்ளிட்ட பலன்கள் தடை செய்யப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம்  மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் சில விதிமுறைகளுடன்  மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டும்  என அம்மாநில அரசு அறிவித்துள்ளது அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

அதன்படி 28 துறைகளில் 35 பிரிவுகள் முழுமை அடையாமல் இருப்பதாகவும் செப்டம்பர் 12ம் தேதிக்குள் அனைத்து துறைகளும் தேர்வு செய்யப்பட பணியாளர்களின் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

click me!