கமலின் கூல் லுக்கிற்கு அழகு சேர்க்கும் ஆடை வடிவமைப்பாளர்.. அந்த எவெர்க்ரீன் நடிகரின் மனைவி - யார் அவர்?

First Published Apr 26, 2024, 7:27 PM IST

Ulaga Nayagan Kamalhaasan : தமிழ் திரையுலகின் பெருமிதமாக தனது 5வது வயது முதல் நடித்து வரும் ஒரு பெரும் கலைஞன் தான் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள். இந்திய திரையுலகமே இவர் கலைக்கு மாபெரும் ரசிகர்கள் என்றால் அது மிகையல்ல. 

alwarpet andavar

பரமக்குடியில் பிறந்து இன்று ஆழ்வார்பேட்டையின் ஆண்டவராக தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கொடி கட்டி பறக்கும் ஒரு மாபெரும் ஜாம்பவான் தான் உலக நாயகன் கமல்ஹாசன். தமிழக அரங்கில் மட்டுமல்ல, இந்திய அரங்கில் மட்டுமல்ல, உலக அரங்கத்திலேயே இவருக்கு தனியே அறிமுகம் தேவையில்லை.

Byri movie : பைரி படத்தில் ஒளிந்திருக்கும் சஸ்பென்ஸ்... பார்ட் 2 வருமா? சையத் மஜீத் Exclusive பேட்டி

Lokesh kanagaraj

இவருடைய நடிப்பை பார்த்து சினிமா கற்றுக் கொண்ட பலர் இன்று திரைத்துறையில் பல்வேறு உச்சங்களை தொட்டிருக்கின்றனர். அதற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு மிகச்சிறந்த சான்று, தன்னுடைய கலை உலக அண்ணன் கமல்ஹாசன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே பல மேடையில் அவரை புகழ்ந்து பேசி இருக்கிறார்.

Vaani Ganapathi

மிகப்பெரிய புகழுக்கு சொந்தக்காரரான உலகநாயகன் கமல்ஹாசன் பெரும் சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கி உள்ளார் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை. கடந்த 1978 ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வாணி கணபதி கமலஹாசனின் பல திரைப்படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். 

Shruti Haasan

ஆனால் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த கமல்ஹாசன், நடிகை சரிகாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த இரண்டு குழந்தைகள் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும். ஆனால் 2005 ஆம் ஆண்டு சரிகாவை, கமல்ஹாசன் விவாகரத்து செய்தார்.

Gautami

அதன் பிறகு கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை பிரபல நடிகை கௌதமியோடு இணைந்து வாழ்ந்து வந்த உலகநாயகன் கமல்ஹாசன். அண்மையில் கௌதமியையும் விட்டு பிரிந்து தற்பொழுது சினிமா மற்றும் அரசியல் என்று இரண்டிலும் மிகவும் பிசியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Amritha Ram

இந்நிலையில் இந்தியன் 2 மற்றும் தக்ளிப் ஆகிய படங்கள் மட்டும் இல்லாமல் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் பொதுவெளியில் பங்கேற்கும் பல நிகழ்ச்சிகளுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வருகிறார் அமிர்தா ராம். இவர் வேறு யாருமல்ல பிரபல நடிகரும் நடன இயக்குனருமான ராம்ஜி அவர்களுடைய மனைவி தான். ராஜ் டிவி நிறுவனத்தில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றியவர் தற்பொழுது ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கூட இருந்தே குழிபறிக்கும் உறவுகள்... சதியில் இருந்து தப்புவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் ட்விஸ்ட்

click me!