அப்போ அவரு.. இப்போ இவரா?.. உலக நாயகனின் Thug Life.. மற்றுமொரு டாப் ஹீரோ வெளியேறினார் - என்னதான் நடக்குது?

First Published Mar 23, 2024, 5:30 PM IST

Kamalhaasan Thug Life : பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் இப்பொது உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் Thug Life என்ற படத்தில் நடிக்கவுள்ளார். ஏற்கனவே இப்பட பணிகள் துவங்கிவிட்டது.

Maniratnam

"நாயகன்" படத்திற்கு பிறகு சுமார் 36 ஆண்டுகள் கழித்து உலக நாயகன் கமலஹாசன், மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இணையும் திரைப்படம் தான் "Thug Life". கடந்தாண்டு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி தொடர்ச்சியாக இப்படப் பணிகள் துவங்கியது.

Sandhya Raagam: லவ் டார்ச்சர் செய்யும் சீனு, கடுப்பான சாரு! மாயா கொடுத்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய அப்டேட்!

Dulqer Salmaan

பிரபல நடிகர் துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி மற்றும் பிரபல நடிகை திரிஷா உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தமான நிலையில், கால்ஷீட் பிரச்சினை காரணமாக முதலில் இந்த திரைப்படத்திலிருந்து விலகினார் துல்கர் சல்மான். இந்நிலையில் இந்த திரைப்படத்திலிருந்து மற்றொரு பிரபலமும் விளங்கியுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Jayam ravi

கிடைத்துள்ள தகவலின்படி உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது அரசியல் பணியில் பிஸியாக இருப்பதால், இந்த படத்திற்கான கால்ஷீட் கொடுக்க முடியாத நிலையில், ஷூட்டிங் பணிகள் நீண்டு கொண்டே போகின்றது. இதனால் தற்பொழுது பிரபல நடிகர் ஜெயம் ரவி அவர்களும் "Thug Life" படத்தில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Kanguva: 'கங்குவா' படத்திற்கு சென்சார் அதிகாரிகள் கொடுத்த 'A' சான்றிதழ்! இது தான் காரணமாம்?

click me!