Not Keerthy Suresh First Choice: 'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முன் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

First Published Feb 26, 2024, 3:55 PM IST

 நடிகையர் திலகம், சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட 'மகாநடி' படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு முன் நடிக்க தேர்வான நடிகை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

கடந்த 2018-ஆம் ஆண்டு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் 'மகாநடி'. இந்த திரைப்படம், பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.
 

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி... சாவித்திரியின் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். மேலும் இவரின் நடிப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக... தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பெற்றார். 

வித்தியாசமான முகங்கள்..! பாலிவுட் போனதும்... அல்ட்ரா மாடர்ன் பேபியாக மாறிய கீர்த்தி சுரேஷ்! லேட்டஸ்ட் போட்டோஸ்
 

'மகாநடி' படத்திற்கு பின்னர், கீர்த்தி சுரேஷின் சினிமா கேரியர் ஜெட் வேகத்தில் உயர்ந்து, இவரை இளம் முன்னணி நடிகையாகவும் மாற்றியது. அதே போல் இந்த படத்திற்கு பின்னர் கீர்த்தி சுரேஷை பல இயக்குனர்கள் கதையின் நாயகியாக நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 

கீர்த்தி சுரேஷ் திரையுலக வாழ்க்கையில் ஒரு மாஸ்டர் பீஸாக அமைந்த, இந்த படத்தில்... கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வானவர் நடிகை நித்யா மேனன் தான் என்பது உங்களுக்கு தெரியுமா?

விஜய் டிவி சீரியலுக்காக... வாய்ப்பு கொடுத்த சன் டிவி தொடருக்கு குட்பை சொன்ன நடிகை! விலக இது தான் காரணமாம்!
 

Famousfix இன் கட்டுரையின் படி, நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'மகாநடி' படத்தில் முதலில் நித்யா மேனன் நடிக்க தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நித்தியா மேனன் அதை நிராகரித்தார். அதே நேரம் நித்தியா மேனனிடம் இப்படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்ததாக திரையுலக நெருங்கிய வட்டாரத்தில் இருந்தும் தகவல்கள் வெளியாகின. சம்பளம் உள்ளிட்ட சில காரணங்களால் இப்படத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
 

mahanati

அதே போல் கீர்த்தி சுரேஷை உறுதி செய்வதற்கு முன்பு, சாவித்திரி வேடத்திற்காக அமலா பால் பெயரும் பரிசீலிக்க பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் கீர்த்தி சுரேஷ் லுக் டெஸ்டில் சாவித்திரி கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருந்ததால், இவரையே வைத்து படம் இயக்க முடிவு செய்தார் நாக் அஷ்வின் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர் ஜெயமோகனின் மகன் அஜிதன் திருமண வரவேற்பு! ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து வாழ்த்து!

mahanati keerthi

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற இந்த படத்தில், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பானுப்ரியா, என்.டி. ராமராவ், நாக சைதன்யா, மோகன் பாபு, திவ்யா வாணி, ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

click me!