Shankar : இளையராஜாவா வேண்டவே வேண்டாம் என தெறித்தோடிய ஷங்கர்! வாய்ப்பு கிடச்சும் இசைஞானி உடன் பணியாற்றாதது ஏன்?

First Published Mar 28, 2024, 12:35 PM IST

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் ஷங்கர், இதுவரை ஒரு படத்தில் கூட இசைஞானி இளையராஜா உடன் இணைந்து பணியாற்றாதது குறித்து பேசி இருக்கிறார்.

Ilaiyaraaja, Director Shankar

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஷங்கர். இதையடுத்து ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தன்னுடைய பிரம்மாண்ட மேக்கிங்கால் மிரள வைத்து வெற்றிகண்டார். பின்னர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், பாய்ஸ் என வரிசையாக மாஸ் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஷங்கர், இதுவரை மொத்தமே 13 படங்களை தான் இயக்கி இருக்கிறார்.

அவர் கைவசம் தற்போது இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று கேம் சேஞ்சர் மற்றொன்று இந்தியன் 2. இந்த இரண்டு படங்களுமே விரைவில் ரிலீஸ் ஆக உள்ளன. இதில் கேம் சேஞ்சர் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். அதேபோல் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இயக்குனர் ஷங்கர் இதுவரை இயக்கிய 13 படங்களில் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இரு இசையமைப்பாளர்களுடன் தான் பணியாற்றி உள்ளார். தற்போது அவர் இயக்கி வரும் இரண்டு படங்களுமே வெவ்வேறு இசையமைப்பாளர்கள். அதில் கேம் சேஞ்சர் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். அதேபோல் இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இவர்கள் இருவருடன் இயக்குனர் ஷங்கர் பணியாற்றுவது இதுவே முதன்முறை ஆகும்.

இதையும் படியுங்கள்... Vivek Daughter Wedding: மறைந்த நடிகர் விவேக் வீட்டில்.. மிகவும் எளிமையாக நடந்த அவரது மகள் தேஜஸ்வினி திருமணம்!

இப்படி சினிமாவில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமான இயக்குனராக வலம் வரும் ஷங்கர் இதுவரை ஒரு படத்தில் கூட இசையமைப்பாளர் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றியதே இல்லை. அதற்கான காரணத்தையும் இயக்குனர் ஷங்கர் வெளிப்படையாக கூறி இருக்கிறார். அதன்படி ஜெண்டிமேல் பட சமயத்திலேயே இளையராஜா உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு ஷங்கருக்கு கிடைத்ததாம். ஆனால் அவருடன் எப்படி பணியாற்றுவது, அவரிடம் எப்படி பாடல்களை கேட்டு வாங்குவது என்கிற தயக்கம் இருந்ததால் நோ சொல்லிவிட்டாராம் ஷங்கர். 

அது மட்டுமின்றி அவர்மீது இருந்த மரியாதை மற்றும் பயத்தினால் தான் இதுவரை இளையராஜா உடன் பணியாற்றவில்லை என்றும் ஷங்கர் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் படங்களில் பணியாற்றாவிட்டாலும் ஒரு விளம்பர படத்தில் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றனர். கமலை வைத்து ஷங்கர் இயக்கிய ஒரு விழிப்புணர்வு விளம்பரத்திற்கு இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Aadujeevitham Review : மலையாள சினிமாவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா ஆடுஜீவிதம்? விமர்சனம் இதோ

click me!