Aadujeevitham Review : மலையாள சினிமாவின் மற்றுமொரு மாஸ்டர் பீஸ் படமாக அமைந்ததா ஆடுஜீவிதம்? விமர்சனம் இதோ
பிளெஸி இயக்கத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ஆடுஜீவிதம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு பொன்னான ஆண்டாகவே அமைந்துள்ளது. இதுவரை பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு என வரிசையாக மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ள நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் நான்காவதாக இணைய காத்திருக்கும் படம் தான் ஆடுஜீவிதம். பிளெஸி இயக்கியுள்ள இப்படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார்.
இது கேரளாவையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். கேரளாவை சேர்ந்த நஜீப் என்பவர் வேலைக்காக சவுதி அரேபியா சென்றபோது அங்கு பாலைவனத்தில் ஒரு கும்பலிடம் சிக்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் அடிமை வாழ்க்கை வாழ்ந்து அதில் இருந்து எப்படி மீண்டும் வந்தார் என்பதை ரத்தமும் சதையுமாக படமாக்கி இருக்கிறார் பிளெஸி.
ஆடுஜீவிதம் படத்தின் பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் மட்டும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடந்த பின்னர் கடந்த 2018-ம் ஆண்டு அப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கினர். சுமார் 6 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின்னர் ஒருவழியாக இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. இப்படம் கேரளாவில் மட்டும் சுமார் 1400 திரைகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. இதுதவிர தமிழகத்தில் 450 ஸ்கிரீன்களிலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 450 ஸ்கிரீன்களிலும், கர்நாடகாவில் 550 ஸ்கிரீன்களிலும் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
ஆடுஜீவிதம் படத்தின் முதல் ஷோ பார்த்த நெட்டிசன்கள் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... Prithviraj : மலையாள திரையுலகின் 'நடிப்பு அசுரன்' பிருத்விராஜ் சுகுமாரன் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா?
ஆடுஜீவிதம் படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. பிருத்விராஜ் நடிப்பில் மிளிர்கிறார். இயக்குனர் பிளெஸி கதையை ஆழமாக சொல்லி உள்ளார். அமலாபால் மற்றும் இதர கதாபாத்திரங்களின் நடிப்பும் அருமை. ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை வெறித்தனமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் படத்தில் பிருத்விராஜின் நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். இது விருதுக்காக எடுக்கப்பட்ட படம் அல்ல. படம் முழுக்க விறுவிறுப்பாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் படத்தின் நாயகன் பிருத்விராஜ் தன்னுடைய நடிப்பால் மிரள வைத்துள்ளார். ஆஸ்கர் ஜெயிக்கும் அளவுக்கு அவரது நடிப்பு அட்டகாசமாக உள்ளது. இது ஒரு மாஸ்டர் பீஸ் திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட்டாவது உறுதி என பதிவிட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் ஒரு படமல்ல, திரையில் ஒரு வாழ்க்கையை பார்க்கலாம். டெக்னிக்கல் ரீதியாக உயர்தரத்தில் உள்ளது. பிருத்விராஜின் நடிப்பு வேறவெலல். காட்சியமைப்பும், பின்னணி இசையும் சூப்பராக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
ஆடுஜீவிதம் என்கிற தரமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் பிளெஸி. நஜீப் ஆக பிருத்விராஜ் மிரள வைத்திருக்கிறார். பிளெஸியின் மேக்கிங், ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... 6 வருடமாக உருவான ஆடுஜீவிதம் படத்துக்காக கம்மி சம்பளம் வாங்கிய அமலாபால்... அதுவும் இவ்வளவு தானா?