பெரிய ஹீரோ வச்சு படம் பண்ணியே எஸ்கேப் ஆகுறாரு.. முடிஞ்சா இவர வச்சு ஹிட் கொடுங்க! அட்லீக்கு சவால் விட்ட பிரபலம்

First Published Jun 18, 2024, 7:50 AM IST

இயக்குனர் அட்லீ பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்தே எஸ்கேப் ஆவதாகவும், அவரால் முடிந்தால் இளம் ஹீரோவை வைத்து ஹிட் கொடுக்கணும் என பிரபல இயக்குனர் சவால் விட்டுள்ளார்.

Atlee Kumar

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இன்று பான் இந்தியா அளவில் மோஸ்ட் வாண்டட் டைரக்டராக வலம் வருகிறார் அட்லீ. எந்திரன் படத்தில் உதவி இயக்குனராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய அட்லீ, அடுத்ததாக நண்பன் படத்திலும் ஷங்கரின் ஏடி-யாக தொடர்ந்து பணியாற்றினார். பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த அட்லீ முதல் படத்திலேயே மாஸ் வெற்றியை ருசித்தார்.

Director Atlee with vijay and Shah Rukh Khan

ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என வரிசையாக மூன்று கமர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, கோலிவுட்டில் டாப் இயக்குனர் லிஸ்ட்டில் இணைந்தார். பின்னர் பாலிவுட்டுக்கு பறந்த அட்லீ, அங்கு முதல் படத்திலேயே ஷாருக்கான் உடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் காம்போவில் கடந்த ஆண்டு திரைக்கு வந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது.

இதையும் படியுங்கள்... ஆகஸ்டில் இருந்து டிசம்பருக்கு தாவிய அல்லு அர்ஜுன்; ஒரே அடியாக தள்ளிவைக்கப்பட்ட புஷ்பா 2 - புது ரிலீஸ் தேதி இதோ

Salman Khan, atlee

ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் பாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்கள் பலர் அட்லீயின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கும் நிலை உருவாகி இருக்கிறது. ஷாருக்கானை தொடர்ந்து அடுத்ததாக சல்மான் கான் உடன் கூட்டணி அமைக்க உள்ளார் அட்லீ. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி பான் இந்தியா அளவில் பிசியான இயக்குனராக வலம் வரும் அட்லீ தமிழ்நாட்டை சேர்ந்த சீனியர் இயக்குனர் ஒருவர் சவால் விட்டுள்ளார்.

Director Perarasu

அவர் வேறுயாருமில்லை இயக்குனர் பேரரசு தான். சமீபத்தில் யூடியூப் சேனல் நேர்காணலில் கலந்துகொண்ட பேரரசு, அட்லீ தொடர்ந்து பெரிய ஹீரோவை வைத்து படம் பண்ணியே எஸ்கேப் ஆகி வருவதாக கூறி இருக்கிறார். பெரிய ஹீரோவை வைச்சு பலனடைவதை விட சின்ன ஹீரோவை வைத்து நம்மலால ஒருவர் பலனடைய வேண்டும். நானும் விஜய், அஜித் படங்களை இயக்கிய பின்னர் பரத்தை வைத்து பழனி படம் இயக்கினேன். அதேபோல் தமிழில் வளர்ந்து வரும் ஹீரோவான கவினை வைத்து அட்லீ படமெடுத்து ஹிட் கொடுக்கணும். இது நான் விடும் சவால் தான்” என பேரரசு கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  Amala Paul Baby: வாவ்.. நடிகை அமலா பாலுக்கு குழந்தை பிறந்தாச்சு! வித்தியாசமான பெயரோடு... வெளியிட்ட போட்டோஸ்!

Latest Videos

click me!