மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு: இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

By SG Balan  |  First Published Jun 25, 2024, 10:17 PM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 18வது மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ராகுல் காந்தியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிப்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப்க்கு கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவித்தார். மற்ற நியமனங்கள் குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

Latest Videos

undefined

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது. முன்னதாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மக்களவையில் எதிர்க்கட்சியை வழிநடத்த ராகுல் காந்தியை பரிந்துரைக்க காங்கிரஸ் காரிய கமிட்டி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அது குறித்து பின்னர் முடிவு எடுப்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார்.

உடல் எடையை குறைத்து ஆயுளைக் கூட்டும் சிம்பிள் டிப்ஸ்! தினமும் இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!

எதிர்க்கட்சி அந்தஸ்து பெற ஒரு கட்சி 55 உறுப்பினர்களை தாண்ட வேண்டும். 2024 மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் 99 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்தது.

மக்களவையில் சபாநாயகர் பதவிக்கு நாளை முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சி தலைவராக செயல்படுவார் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. சபாநாயகர் தேர்தலில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஓம் பிர்லாவை வேட்பாளராக நிறுத்துகிறது. இந்தியா கூட்டணி தொகுதி கேரளாவைச் சேர்ந்த் கே. சுரேஷை நிறுத்தியுள்ளது. சபாநாயகர் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

முன்னதாக, எதிர்க்கட்சிக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், ஓம் பிர்லாவை சபாநாயகர் ஆவதற்கு ஆதரவளிக்க த் தயாராக இருப்பதாக காங்கிரஸ் கூறியது. அதற்கு பாஜக திட்டவட்டமாக மறுத்துவிட்டதால் நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது.

முதல் முறையாக நிலவின் மண் மாதிரியை பூமிக்குக் கொண்டுவந்த சீனா! விண்வெளி துறையில் புதிய சாதனை!

click me!