"நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தின் நீட்சியாக 2006ல் அரசியலுக்கு வந்தேன். அது எனது டிஎன்ஏவில் ஆழமாக பதிந்துள்ளது" என்று ராஜீவ் சந்திரசேகரன் கூறினார்.
மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரத்தில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், அரசியலில் இருந்து விலகும் எண்ணம் இல்லை என்று கூறியிருக்கிறார். அரசியலை சமூக சேவையாகவே பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட வாக்குகள் பெற்றது மக்கள் குறிப்பிடத்தக்க மரியாதை என்று கூறிய அவர் திருவனந்தபுரம் மக்களுடன் தொடர்ந்து பிணைப்பைப் பேணுவதற்கான உறுதி கூறினார். தன்னைப் பொறுத்தவரை, அரசியல் என்றால் பொது சேவைதான் என்றும் வலியுறுத்தினார்.
"நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தின் நீட்சியாக 2006ல் அரசியலுக்கு வந்தேன். அது எனது டிஎன்ஏவில் ஆழமாக பதிந்துள்ளது. எனவே தேர்தலில் வெற்றி பெறுவதும் தோல்வி அடைவதும் பற்றி கவலை இல்லை. திருவனந்தபுரம் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்" என்றும் ராஜீவ் சந்திரசேகரன் கூறினார்.
ஒரே நாடு ஒரே சார்ஜர்! ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் அதிரடி உத்தரவு!
நரேந்திர மோடி கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சிக்கான முழுமையான தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளார் என்று ராஜீவ் பாராட்டினார்.
கேரளாவின் தொழில்நுட்பம் பற்றி பேசிய முன்னாள் மத்திய அமைச்சர், கேரள பொருளாதார மாடல் நிலைகுலைந்துள்ளது எனவும் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த தவறிவிட்டதாகவும் விமர்சித்தார்.
"கேரளாவில், நகைச்சுவை என்னவென்றால், நம்மிடம் பல திறமையான இளைஞர்கள் உள்ளனர், ஆனால் அரசாங்கத்தில் உள்ள கட்சிககளின் கருத்தியல் பிரச்சனை காரணமாக, கார்ப்பரேட்களை உள்ளே வர அனுமதிக்கவில்லை" என்று குறை கூறினார்.
வெற லெவல் கிரியேட்டிவிட்டி! ட்ரெண்டுக்கு ஏற்ப இசை அமைக்கும் AI மியூசிக் ஜெனரேட்டர்கள்!