ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்ட அசாதுதீன் ஓவைசி! பதவிக்கே வேட்டு வைக்க பார்க்கும் பாஜக!

By SG BalanFirst Published Jun 25, 2024, 11:32 PM IST
Highlights

ஓவைசியின் பேச்சைக் கண்டித்துள்ள பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா, அசாதுதீன் ஒவைசியை தகுதி நீக்கம் செய்யலாம்" எனத் தெரிவித்துள்ளார்.ஆனால், ஓவைசி தான் எந்த விதியையும் மீறவில்லை என்பகிறார்.

தெலுங்கானாவின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷமிட்டதை அடுத்து, அவரை நாடாளுமன்ற விதிகளின்படி தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓவைசியின் பேச்சைக் கண்டித்துள்ள பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா, அரசியலமைப்பின் 102வது பிரிவைக் குறிப்பிட்டு, "தற்போதுள்ள விதிகளின்படி, அசாதுதீன் ஒவைசியை அவரது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம்" என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Latest Videos

அமித் மாளவியா லோக்சபா செயலகக் கணக்கையும் தனது ட்வீட்டில் டேக் செய்து, "கவனிக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஓவைசி தான் அரசியலமைப்பின் எந்த விதியையும் மீறவில்லை என்று கூறியுள்ளார்.

அரசியலை விட்டு விலகும் எண்ணம் இல்லை! முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உறுதி

அரசியலமைப்பின் பிரிவு 102, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்வதற்கான காரணங்களைக் குறிப்பிடுகிறது.

முன்னதாக, மக்களவையில் எம்.பி.யாக பதவியேற்ற ஓவைசி, "ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்" என முழக்கமிட்டார். இதற்கு மக்களவையில் பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபாநாயகர் ஓவைசியின் பதவியேற்பு உறுதிமொழி மட்டுமே அவையில் பதிவு செய்யப்படும் என்று உறுதியளித்தார். முன்னதாக, ஓவைசி பதவியேற்க மேடைக்குச் சென்றபோது, பாஜக எம்.பி.க்கள் ​​ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ஹைதராபாத் எம்.பி., ஓவைசி, தான் அரசியல் சாசனத்தின் எந்த விதியையும் மீறவில்லை என்றார். "மற்ற உறுப்பினர்களும் வித்தியாசமான விஷயங்களைச் சொல்கிறார்கள்... நான் 'ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம்' என்று சொன்னேன். அது எப்படி தவறாகும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

"மற்றவர்கள் சொல்வதை நீங்களும் கேட்க வேண்டும். பாலஸ்தீனம் பற்றி மகாத்மா காந்தி கூறியதைப் படியுங்கள்" எனவும் அவர் குறிப்பிட்டார். பாலஸ்தீனத்தை பற்றி ஏன் முழக்கமிட்டீர்கள் என்ற கேள்விக்கு, "அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள்" என்று பதில் கூறினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு: இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

click me!