Vikram Movie Update: விக்ரம் படத்தை வெளியிட தடையா.? இது என்னது புது சிக்கல்...அதிரடி காட்டிய நீதிமன்றம்...

First Published May 27, 2022, 9:49 AM IST

Vikram Movie Update: உலக நாயகன் கமல் நடிப்பில் உருவாகியுள்ள  'விக்ரம்' படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

kamal

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் நடிக்கும் ‘விக்ரம்’ படம் வரும் ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

kamal

கமல் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு பிறகு  'விக்ரம்' படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதால், ரசிகர்கள் படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர் . இந்தப்படம் தொடர்பாக வெளியாகும் ஒவ்வொரு அப்டேட்டையும் இணையத்தை தெறிக்கவிட்டு வருகின்றனர். அண்மையில் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும், மாஸ், ஆக்சன் மற்றும் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில், சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

kamal

இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், விக்ரம்' படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி மனு அளிக்கப்பட்டது.

kamal

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சி.சரவணன் அமர்வு, இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு 'விக்ரம்' படத்தை சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து  உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனு தொடர்பாக ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 1 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க.....Sonali Bendre Cancer: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலர் தினம் ஹீரோயின்...இப்போது அவரின் நிலை என்ன தெரியுமா..?

click me!