சரவெடி மாதிரி வெடிக்காம புஷ்வானம் மாதிரி புஷ்ஷூன்னு போன டெல்லி; குல்தீப் யாதவ் ஆறுதல், 153 ரன்கள் எடுத்த DC!

Published : Apr 29, 2024, 09:36 PM IST

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 47ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

PREV
17
சரவெடி மாதிரி வெடிக்காம புஷ்வானம் மாதிரி புஷ்ஷூன்னு போன டெல்லி;  குல்தீப் யாதவ் ஆறுதல், 153 ரன்கள் எடுத்த DC!
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 47ஆவது லீக் போட்டி தற்போது ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

27
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பிரித்வி ஷா மற்றும் ஜாக் பிரேசர் மெக்கர்க் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

37
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

இதில், பிரித்வி ஷா முதல் ஓவரிலேயே 4 பவுண்டரி உள்பட 13 ரன்கள் எடுத்தார். ஆனால், 2ஆவது ஓவரிலேயே அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று 3ஆவது ஓவரில் மெக்கர்க் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்த கையோடு 12 பந்துகளில் மிட்செல் ஸ்டார் பந்தில் வெளியேறினார்.

47
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

இவரைத் தொடர்ந்து அபிஷேக் போரெல் மற்றும் ஷாய் ஹோப் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால், ஹோப் ஒரு சிக்ஸர் அடித்த கையோடு ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் பெரிதாக சோபிக்கவில்லை. அவர், 18 ரன்களில் ஹர்ஷித் ராணா பந்தில் கிளீன் போல்டானார்.

57
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

அதன் பிறகு ரிஷப் பண்ட் மற்றும் அக்‌ஷர் படேல் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். எனினும், பெரியளவிற்கு எடுத்துச் செல்ல முடியவில்லை. 10 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் 4 விக்கெட்டுகளை 93 ரன்கள் எடுத்திருந்தாலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 11ஆவது ஓவரின் முதல் பந்திலேயே பண்ட் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

67
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 4, அக்‌ஷர் படேல் 15, இம்பேக்ட் பிளேயர் குமார் குஷாக்ரா 1, ரசீக் தர் சலாம் 8 என்று வரிசையாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கடைசியில் குல்தீப் யாதவ் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 26 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இறுதியாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.

77
Kolkata Knight Riders vs Delhi Capitals, 47th Match

பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவத்தி 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories