நீர் பகுப்பாய்வில் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும் தொட்டியில் உள்ள நீர் குடிப்பதற்கு ஏற்றதுதான் என்றும் தெரியவந்துள்ளது.
சங்கம்விடுதி கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்று திருச்சி மண்டல பொது சுகாதார நீர் பகுப்பாய்வகம் கூறியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சங்கம்விடுதி கிராமத்தில் உள்ள குவாண்டம் தெருவில் இருக்கும் குடிநீர் தொட்டியில் ஏப்ரல் 25ஆம் தேதி மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதன் பேரில் கந்தர்வகோட்டை பி.டி.ஓ. நேரில் சென்று தண்ணீர் தொட்டியைப் பார்வையிட்டார்.
undefined
குடிநீரை ஆய்வுக்கு உட்படுத்துவதற்காக தொட்டியில் இருந்த நீரின் மாதிரியும் அவர் சேகரித்தார். அந்த மாதிரி திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பொது சுகாதார நீர் பகுப்பாய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் சங்கம்விடுதி குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதற்கான அறிகுறி இல்லை என்றும் தொட்டியில் உள்ள நீர் குடிப்பதற்கு ஏற்றதுதான் என்றும் தெரியவந்துள்ளது.
பாலியல் புகாரில் சிக்கய தேவகவுடா பேரன் நாளை கட்சியிலிருந்து நீக்கம்: குமாரசாமி தகவல்
மாசுபட்டிருந்தால் அந்த நீரில் ஈகோலை பாக்டீரியா உருவாகி இருக்கும், ஆனால், அவ்வாறு பாக்டீரியா எதுவும் இல்லை என்றும் நீர் பகுப்பாய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொட்டையை நீண்டகாலமாக சுத்தம் செய்யாமல் இருந்ததால் பாசி படிந்திருக்கிறது என்றும் அதைப் பார்த்த சிலர் மாட்டுச்சாணம் கலந்திருப்பதாகத் தவறாகக் கருதிவிட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு முன் புதுக்கோட்டையில் வேங்கை வயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை எழுப்பியது. அந்தச் சம்பவம் நடத்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் அந்த வழக்கில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என விமர்சிக்கப்படுகிறது.
இச்சூழலில் சங்கம்விடுதியில் குடிநீரில் மாட்டுச்சாணம் கலந்ததாக வந்த புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. உடனடியாக அந்த கிராம மக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் செய்யப்பட்டது.
வளைகுடா நாடுகளில் மே மாதம் மீண்டும் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்