தொகுப்பாளராக களம் இறங்கும் ரக்ஷன் - மணிமேகலை! அட கோமாளிகள் இவங்க தானா? 'குக் வித் கோமாளி' சீசன் 5 அப்டேட்!

First Published Mar 27, 2024, 7:50 PM IST

'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் துவங்க உள்ள நிலையில்... தற்போது இரண்டாவது ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.
 

பிக்பாஸ் சீசன் 7 முடிந்த அடுத்த மாதமே, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-ஆவது சீசன் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவ்வப்போது இதுகுறித்த அறிவிப்புகள் வெளியான வண்ணம் இருந்த நிலையில், திடீர் என, இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த செஃப் வெங்கடேஷ் பட்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதை உறுதி செய்தார்.

இவரை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின், இயக்குனர், தயாரிப்பாளர் என அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதால்... 'குக் வித் கோமாளி ' சீசன் 5 நிகழ்ச்சி நடக்குமா? என்கிற சந்தேகம் எழுந்தது.

Yashika: யாஷிகாவுடன் CSK மேட்ச் பார்த்து ரணகளம் செய்த.. விஷ்ணு மற்றும் ரவீனா! வைரலாகும் போட்டோஸ்!

'குக் வித் கோமாளி' துவங்குவது சற்று தாமதமாகி இருந்தாலும், புதிய நடுவருடன் விரைவில் துவங்குவதை கடந்த சில தினங்களுக்கு முன் புதிய புரோமோ வெளியிட்டு விஜய் டிவி உறுதி செய்தது.

அதன்படி இம்முறை, பல பிரபலங்கள் வீட்டு விசேஷங்களில் விதவிதமாக சமைத்து அசத்தி வரும், மத்தம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்க உள்ளார். மற்றொரு நடுவராக செஃப் தாமு இருக்க போகிறார். இவர்களின் இன்ட்ரோ ஃபிளைட்டில் இருந்து இறங்குவது போல் அமைந்தது.

Abbas About Son: பெத்த பிள்ளையை தனக்கு பிறந்தவனா என சந்தேகப்பட்ட அப்பாஸ்! DNA பரிசோதனையில் தெரிய வந்த உண்மை!

இதை தொடர்ந்து சற்று முன்னர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில், தொகுப்பாளர்கள் மற்றும் சில கோமாளிகளை இன்ட்ரோ செய்துள்ளனர். ரக்ஷனுடன் சேர்ந்து மணிமேகலை 'குக் வித் கோமாளி' 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில், குரோஷி, சுனிதா, புகழ் மற்றும் ராமர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மற்றவர்கள் பற்றிய புரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!