விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில், அதிகப்படியான ரசிகர்களை கவர்ந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி என்றால் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். பிக்பாஸ் முடிவடைந்த அடுத்த மாதமே 'குக் வித் கோமாளி' சீசன் 5 துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிகழ்ச்சி துவங்குவதால் தாமதம் ஏற்பட்டது.
அதன்படி, ஏப்ரல் 27-ஆம் தேதி குக் வித் கோமாளி சீசன் 5 துவங்க உள்ள நிலையில், அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சி குறித்த புரோமோ வெளியிடப்பட்டு வருகிறது. நேற்றைய தினம் கோமாளிகள் யார் யார் என்பதை அறிவிக்கும் விதமாக வீடியோ வெளியான நிலையில், தற்போது இந்த முறை குக்காக களமிறங்க உள்ள போட்டியாளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எதிர்பாராத பல பிரபலங்கள் குக்குகளாக இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ரசிகர்களும் நிகழ்ச்சியை காண ஆயத்தமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.