அடக்கொடுமையே... இந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக தான் ராட்சசன் படத்துக்கு நோ சொன்னாராம் விக்ரம்..!

First Published Feb 25, 2024, 11:54 AM IST

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ராட்சசன் திரைப்படத்தை நடிகர் விக்ரம் நிராகரித்தது ஏன் என்பது பற்றி பார்க்கலாம்.

Vikram rejected Ratsasan Movie

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் ராட்சசன். இதில் அமலா பால், ரவீனா தாஹா, அம்மு அபிராமி, காளி வெங்கட், ராதா ரவி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த திரில்லர் படங்களின் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அளவுக்கு தன்னுடைய விறுவிறுப்பான திரைக்கதையால் மிரள வைத்தார் ராம்குமார்.

ratsasan Movie

ராட்சசன் படம் ரிலீஸ் ஆன பின்னர் இப்படத்தை பார்த்த பிற மொழி பிரபலங்களும் அதன் ரீமேக் உரிமையை வாங்க வரிசைகட்டி நின்றனர். இதையடுத்து இப்படம் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. ராட்சசன் படத்தின் வெற்றிக்கு பின் உள்ள வலியை அதன் இயக்குனர் ராம்குமார் பல மேடைகளில் கூறி இருக்கிறார். ஏனெனில் இப்படத்தை விஷ்ணு விஷாலுக்கு முன்னர் 17 ஹீரோக்கள் ரிஜெக்ட் செய்துவிட்டார்களாம்.

இதையும் படியுங்கள்... Vishnu Vishal Salary: 'லால் சலாம்' வெற்றியால் சம்பளத்தை மளமளவென உயர்த்திய விஷ்ணு விஷால்! முழு விவரம் இதோ!

Vishnu Vishal's Ratsasan

அதுமட்டுமின்றி 22 தயாரிப்பாளர்களும் நோ சொல்லிவிட்டார்களாம். அத்தனை தடைகளை தாண்டி வந்து இறுதியாக வெற்றிகண்டுள்ளது இப்படம். ஆனால் முதன்முதலில் இப்படத்தின் கதையை எழுதும்போது, இயக்குனர் ராம்குமார் மனதில் வைத்திருந்த ஹீரோ சீயான் விக்ரம் தானாம். இது முழுக்க முழுக்க அவருக்காக எழுதப்பட்ட கதையாம். அவருக்கும் கதை கேட்டு பிடித்திருந்தாலும், கால்ஷீட் பிரச்சனை காரணாமாக நோ சொல்லிவிட்டாராம் விக்ரம்.

Vikram

விக்ரம் நோ சொன்னதும் விஷால் உள்பட பல்வேறு நடிகர்களுக்கு இந்த கதை சென்று இறுதியாக விஷ்ணு விஷாலே தன் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இதில் ஹீரோவாக நடித்தார். இப்படம் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இத்தகைய பொன்னான வாய்ப்பை சீயான் விக்ரம் தவறவிட்டதற்கு காரணமே சாமி ஸ்கொயர் திரைப்படம் தானாம். ஹரி இயக்கத்தில் உருவான அந்த பிளாப் படத்தில் நடிப்பதற்காக இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் செய்திருக்கிறார் விக்ரம்.

இதையும் படியுங்கள்... வரிசையாக ரஜினியின் 4 படங்களை நிராகரித்து... சூப்பர்ஸ்டாருக்கே தண்ணிகாட்டிய ஐஸ்வர்யா ராய்! அதுல 3 வேறலெவல் ஹிட்

click me!