Chiyaan 62 Update: போட்ரா வெடிய.. சீயான் 62 படப்பிடிப்பு எப்போது துவக்கம்? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

First Published Mar 22, 2024, 8:57 PM IST

நடிகர் சீயான் விக்ரம் நடிக்கும், 62வது படம் குறித்த அப்டேட்... அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் தற்போது இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
 

vikram

தமிழ் சினிமாவில், தன்னுடைய உயிரை பணயம் வைத்து...  உடலை வருத்திக்கொண்டு ரிஸ்க் எடுத்து நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். பொன்னியின் செல்வன் படத்தை தவிர்த்து... இவர் தனி ஹீரோவாக நடித்த படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. 
 

எப்படியும் வெற்றிப்படத்தை கொடுத்தே தீரவேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ள விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் நடித்துள்ள "தங்கலான்" படத்தை மிகவும் நம்பி உள்ளார். மே மாதம் இப்படம் வெளியாகலாம் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Siragadikka Aasai: கர்ப்பமாகும் மீனா.. விஜயாவின் ஆசைக்கு வைக்கப்பட்ட ஆப்பு? இனி தான் இருக்கு ரியல் சம்பவம்!!

அதே போல் கௌதம் வாசுதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள "துருவ நட்சத்திரம்" படமும் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் விக்ரம் நடிக்கும் 62-ஆவது படம் குறித்த மாஸ் அப்டேட் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் SU அருண்குமார் இயக்க உள்ளார். இப்படத்தின் ஸ்கிரிப்டிங் பணிகள்... மும்முரமாக சென்று கொண்டிருந்த நிலையில்... தற்போது இப்படத்தின் ஷூட்டிங் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Vikram

அதன்படி, வரும் ஏப்ரல் மாதம் முதல்... ஷூட்டிங் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்த்தியும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் இப்படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய அப்டேட்டும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக கை ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!

click me!