ஸ்டார் முதல் ரசவாதி வரை... இந்த வாரம் மட்டும் தியேட்டர் மற்றும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸா?

First Published May 7, 2024, 8:43 AM IST

அரண்மனை 4 திரைப்படம் திரையரங்கில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், அதற்கு போட்டியாக இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகிறது என்பதை பார்க்கலாம்.

ஸ்டார் (Star Movie)

டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இப்படத்தை இளன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் பியார் பிரேமா காதல் படத்தை இயக்கி இருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சுமார் 6 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள படம் இதுவாகும். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன், அதிதி போஹங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் மே 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ரசவாதி (Rasavathi)

மெளனகுரு, மகாமுனி போன்ற திரைப்படங்களை இயக்கிய சாந்தகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ரசவாதி. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். கொடைக்கானல் பின்னணியில் உருவாகி இருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான இதில் அர்ஜுன் தாஸ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் ஜிஎம் சுந்தர், ரிஷிகாந்த், விஜே ரம்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வருகிற மே 10ந் தேதி திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... 'ஒரு நொடி' படத்தின் வெற்றியை தொடர்ந்து... புதிய படத்திற்காக மீண்டும் இணையும் அதே படக்குழு!

உயிர் தமிழுக்கு (Uyir Thamizhuku)

இயக்குனர் அமீர் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் உயிர் தமிழுக்கு. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். ஆதம் பாவா இயக்கியுள்ள இப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார் அமீர். அரசியல் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்து உள்ளார். இப்படமும் ஸ்டார் மற்றும் ரசவாதி படங்களுக்கு போட்டியாக வருகிற மே 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஓடிடி ரிலீஸ் திரைப்படங்கள் (OTT release Movies)

சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான தி பாய்ஸ் திரைப்படம் மே 7-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. அதேபோல் வருகிற மே 9-ந் தேதி பகத் பாசிலின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான ஆவேஷம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. திரையரங்கில் வெற்றிநடை போட்டு வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடி வசூலித்திருந்தது. இதுதவிர விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த ரோமியோ திரைப்படம் வருகிற மே 10ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... Shakeela : நீங்க ரேப் சீனில் நடிச்சதே இல்லையா? பயில்வானை லெப்ட் ரைட் வாங்கிய ஷகிலா - அவர் ரியாக்ஷன் என்ன?

click me!