மீன ராசியில் உருவாகி உள்ள யோகம்.. இந்த ராசிக்காரர்களின் காட்டின் இனி பண மழை தான்..

First Published Apr 12, 2024, 3:35 PM IST

சதுர்கிரக யோகம் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்களை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி சில கிரகங்களின் பெயர்ச்சியால் சில நேரங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் தற்போது சூரியன், புதன், ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மீன ராசியில் ஒன்றாக பயணித்து வருகின்றன. 

zodiac

இப்படி 4 கிரகங்கள் மீன ராசியில் பயணிப்பதால் சதுர்கிரக யோகம் உருவாகிறது. இந்த சுபயோகத்தின் தாக்கம் அனைத்து கிரகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சதுர்கிரக யோகம் எந்தெந்த ராசிகளுக்கு நற்பலன்களை வழங்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம் :

ரிஷப ராசியின் 11-வது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகி உள்ளது. வருமானம் லாப வீட்டில் இந்த யோகம் உருவாகி உள்ளதால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்வோருக்கு எதிர்பாராத யோகம் கிடைக்கும். ஹோட்டல் தங்கம், வெள்ளி தொடர்பான வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஏற்கனவே முதலீடிகளை செய்திருந்தாலும் அதிலிருந்தும் நல்ல லாபம் கிடைக்கும்.

மிதுனம் : 

மிதுன ராசியின் 10-வது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகி உள்ளது. இதனால் அரசு வேலை தேடுவோருக்கு விரைவில் அரசு வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு தேடி வரும் காலக்கட்டமாக இது இருக்கும்.

Sagittarius

தனுசு : 

தனசு ராசியின் நான்காம் வீட்டில் சதுர்கிரகம் உருவாகி உள்ளது. இதனால் உங்களுக்கு பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும். சொத்து, வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தை பொறுத்த வரை நன்றாக இருக்கும். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இனிமையாகவும் இருக்கும்.

click me!