குஷி ஜோதிகாவையே மிஞ்சும் அளவுக்கு... சேலையில் வளைத்து வளைத்து இடுப்பை காட்டி ரச்சிதா நடத்திய போட்டோஷூட்

First Published Jan 21, 2024, 12:43 PM IST

சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமான நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவரான ரச்சிதா மகாலட்சுமி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் ஆன பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த சீரியலில் ஜோதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ரச்சிதா, அதே சீரியலில் தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலிக்க தொடங்கினார்.

பிரிவோம் சந்திப்போம் தொடர் முடிந்ததும் தினேஷும், ரச்சிதாவும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சீரியலில் பிசியாக நடித்து வந்தனர். குறிப்பாக ரச்சிதாவுக்கு, சரவணன் மீனாட்சி சீரியலும், தினேஷுக்கு பூவே பூச்சூடவா சீரியலும் திருப்புமுனையாக அமைந்தன.

தினேஷ் உடன் சுமார் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ரச்சிதா, கடந்த 2020-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் ரச்சிதா போட்டியாளராக கலந்துகொண்ட பின்னர், தினேஷ் தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக புகார் அளித்து பரபரப்பை கிளப்பினார்.

இதையும் படியுங்கள்... ரக்ஷிதா மகாலட்சுமி முதல் சரவணன் விக்ரம் வரை.. ஆடம்பர சொகுசு கார் வைத்திருக்கும் தொலைக்காட்சி பிரபலங்கள்!

இந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தினேஷ் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் தன்னை புரிந்துகொண்டு ரச்சிதா தன்னுடன் மீண்டும் சேருவார் என்கிற கனவோடு தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். ஆனால் அது பலிக்கவில்லை.

தினேஷுடன் இனி சேரவே மாட்டேன் என்கிற முடிவில் தீர்க்கமாக இருப்பதாக ரச்சிதா அறிவித்துள்ளதால், தினேஷ் மிகவும் அப்செட் ஆகி உள்ளார். இது ஒருபுறம் இருக்க, விதவிதமாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் ரச்சிதா.

அந்த வகையில் சேலையில் குஷி ஜோதிகா போல் இடுப்பழகை காட்டி ரச்சிதா மிகவும் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். சினிமா வாய்ப்புகளை தட்டிதூக்கவே ரச்சிதா இப்படி கவர்ச்சி ரூட்டுக்கு தாவி இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

click me!