Vegetables : கொட்டும் மழை.!கிடு,கிடுவென உயரும் காய்கறி விலை-ஒரு கிலோ பீன்ஸ்,இஞ்சி என்ன விலை தெரியுமா?

First Published | May 19, 2024, 7:49 AM IST

தமிழகத்தில் கோடைவெயில் தாக்கம் சற்று குறைந்த நிலையில் மழையானது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக காய்கறிகளின் விலை சற்று அதிகரித்துள்ளது. 

தக்காளி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் 1கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 15 முதல் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 22 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் இந்த 5 வகையான காலை உணவுகள் தான்..! லிஸ்ட் இதோ..!!.
 

vegetable price hike

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
 

Tap to resize

கேரட் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Tamilnadu School ReOpen: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்..!

vegetables

வெண்டைக்காய் விலை நிலவரம்

கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!