மழையில் மின் வயர் அறுந்துபோனால் என்ன செய்ய வேண்டும்? இந்த நம்பரை நோட் பண்ணிக்கோங்க!

First Published | May 18, 2024, 4:11 PM IST

தமிழ்நாட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தால் மின் வயர்கள் அறுந்து விழக்கூடும். அப்படி நடக்கும்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்று மின் வாரியம் அறிவுறுத்தி இருக்கிறது.

electricity

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 22ஆம் தேதி வரை தமிழகத்தில் அதி கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க பேரிடர் மீட்புக் குழுவினரும் ஆயத்தமாக உள்ளனர்.

electricity complaint

மின்வாரியப் பணியாளர்களும் மின் இணைப்புகளில் ஏற்படும் பழுதை விரைந்து சரிசெய்ய தயாராக உள்ளனர். இந்நிலையில், சூழலில் மழையால் மின்வயர் அறுந்து விழுந்தால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) சாமுக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

Tap to resize

power cut due to heavy rain

கோடைகால மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மின் கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் அவற்றை யாரும் தொடாதீர்கள் என்றும் எச்சரித்துள்ளது.

உங்கள் பகுதியில் மழையால் மின் வயர் ஏதும் அறுந்து விழுந்திருப்பதை அறிந்தால் உடனடியாக மின்வாரியத்தின் 9498794987 என்ற எண்ணில் மின்னகத்தைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

TANGEDCO

மின் நுகர்வோரின் புகார்களைப் பெறுவதற்காக 24 மணிநேரமும் இயங்கும் மின்னகம் என்ற வாடிக்கையாளர் சேவை மையத்தை 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு தொடங்கியது. இந்த எண்ணில் பெறப்படும் புகார்கள் மீது மின்வாரிய பணியாளர்கள் விரைவாக நடவடிக்கை எடுத்து மின் இணைப்பில் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்கின்றனர்.

Latest Videos

click me!