வெப்ப அலை- மக்கள் அவதி
கோடை வெயிலானது தமிழகத்தில் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டது. 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்ததால் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசியது. இதனால் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியது. இதன் காரணமாக வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள குளுமையான இடங்களை தேடி மக்கள் செல்லும் நிலை உருவானது.
பரவலாக பெய்யும் மழை
குறிப்பாக ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக சுற்றுலா செல்ல தொடங்கினர். வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், தற்போது மக்களுக்கு ஓரளவு நிம்மதியை கொடுக்கும் வகையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இதமான வானிலை பெரும்பாலான மாவட்டங்களில் நிழவுகிறது. குறிப்பாக வளி மண்டல் மேலடுக்கு சுழற்சியால் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது வெறும் ட்ரெய்லர் தான்.. இனிமே தான் மெயின் பிக்சரே இருக்கு.. குட்நியூஸ் சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..
courtallam old
குற்றாலத்தில் தண்ணீர் வரத்து
இந்த நிலையில் குற்றாலத்தில் கடந்த சில மாதங்களாக முற்றிலுமாக தண்ணீர் வறண்டு மொட்டப்பாறைகள் மட்டுமே காட்சியளித்தது. இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்ப சென்றனர். எப்போது சீசன் தொடங்கும் மழை சாரலோடு குற்றால அருவியில் ஆட்டம் போடலாம் என காத்திருந்தனர்.
kutralam falls
இதமான வானிலையோடு கொட்டும் தண்ணீர்
இந்தநிலையில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் குற்றால அருவியில் இதமான சூழல் நிலவுகிறது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் மிதமான அளவு கொட்டுகிறது. தற்போது தென்காசி மாவட்டம் மற்றும் வனப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்னும் ஒரு வாரத்திற்கு குற்றால அருவியில் தண்ணீர் வரும் என குற்றாலவாசிகள் தெரிவித்துள்ளனர்.