Vegetable Price : திடீரென உயர்ந்த காய்கறிகளின் விலை.! ஒரு கிலோ தக்காளி,வெங்காயம், பீன்ஸ் என்ன விலை தெரியுமா.?

First Published May 17, 2024, 9:16 AM IST

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மழையானது பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் அதிகபட்ச மழை பெய்துள்ளதால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோய்ம்பேடு சந்தைக்கு குறைவான அளவு காய்கறிகள் வந்துள்ளதால் விற்பனை விலை சற்று அதிகரித்துள்ளது. 
 

தக்காளி, வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் தக்காளி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

பாஜக கூட்டணிக்கு இப்பவே பெரும்பான்மை வந்துவிட்டது.!! மோடி மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி- தமிழிசை நம்பிக்கை

Latest Videos


கேரட் விலை என்ன.?

கேரட் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45க்கும்,  வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும் முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

உச்சத்தில் பீன்ஸ் விலை

பீன்ஸ் ஒரு கிலோ 160 க்கும், இஞ்சி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் தரமான சம்பவம் இருக்காம்.. சென்னை வானிலை மையம் வார்னிங்..!

click me!