குட் நியூஸ்... அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை... திடீரென குறைந்தது.! ஒரு சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா.?

First Published | May 13, 2024, 11:25 AM IST

தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று சவரன் ஒன்றுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது. இதன் காரணமாக நகை பிரியர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளது. 

இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம்

இந்தியாவில் தங்கத்தின் மீது அதிகம் ஆர்வம் இருப்பதால் விற்பனை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அந்ந வகையில் விற்பனை விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இதற்கு முக்கிய காரணம் தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது.

மேலும் திருமணம் போன்ற முக்கிய சுப நிகழ்ச்சியில் தங்கம் முக்கிய அம்சமாக உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் தங்கம் விற்பனை உச்சத்தில் உள்ளது.
 

அட்சய திருதி- 15ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை

கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்த அட்சய திருதி அன்று தங்கத்தின் விலையானது ஒரே நாளில் 3 முறை ஏறியது. இருந்த போதும் தங்கத்தின் மீதான ஆர்வம் காரணமாக ஒரே நாளில் 15ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தங்கம் விற்பனையானது.

வீட்டில் இதை விட அதிகமாக தங்கம் இருந்தால் வருமான வரி நோட்டீஸ் வரும்.. அபராதம் எவ்வளவு தெரியுமா?

Tap to resize

குறைந்தது தங்கத்தின் விலை

இந்தியாவில் 22 கேரட் தங்கத்தின் விலையானது நேற்று ஒரு கிராம் 6ஆயிரத்து 750 க்கு விற்பனை செய்யப்பட்டது .இன்று கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6ஆயிரத்து 725 ரூபாயாக உள்ளது. இதே போல ஒரு பவுன் அழைக்கப்பட்டு 8 கிராம் தங்கத்தின் விலையானது நேற்று 54,000 விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 53 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கம் விலை என்ன.?

இதே போல 24 கேரட் தங்கத்தின் விலை ஆனது நேற்று ஒரு கிராம் 7364 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 28 ரூபாய் குறைந்து 7336 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம்  அதாவது ஒரு சவரன் பொறுத்தவரை நேற்று 58,912 ரூபாயும், இன்று 58,688 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. நேற்றைய விட இன்று 224 ரூபாய் சவரன் ஒன்றுக்கு தங்கம் விலை குறைந்துள்ளது.

சொத்து மதிப்பு ரூ.3.2 லட்சம் கோடி.. ரூ.98 கோடியில் வைரம்.. இந்த உலகப் பணக்காரர் பற்றி தெரியுமா?

Latest Videos

click me!