தயிர் தலைமுடிக்கு ஒரு வரப்பிரசாதம்... எப்படி தெரியுமா..??

First Published Mar 6, 2024, 2:19 PM IST

தயிர் உடலுக்கும் மட்டுமல்ல, தலைமுடிக்குக்கும் ஆரோக்கியமானது தான். எப்படி தெரியுமா...?

தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆயுர்வேதத்தில் தயிருக்கு தனி இடம் உண்டு. எந்த நோயையும் குறைக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆனால் தயிர் கூந்தலுக்கு ஆரோக்கியமானது என்று தெரியுமா?

சமையலறையில் கிடைக்கும் பொருட்களுடன் தயிரை கலந்து பாருங்கள். கூந்தலுக்கு தொடர்ந்து தயிரை பயன்படுத்தினால்.. கூந்தல் பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும். மேலும், தயிர் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவுகிறது.
 

விரைவான பலனைப் பெற, தயிரை முடிக்கு சரியாகப் பயன்படுத்த வேண்டும். சிறந்த முடிவுகளைப் பெற, முடி பராமரிப்பில் புளிப்பு தயிரைப் பயன்படுத்துவது எப்படி என்பதை அறியலாம் வாருங்கள்..

தயிர் உடலுக்கு நல்லது. இந்த தயிர் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும், கூந்தலுக்கும் நல்லது. தயிர் உங்கள் முடியை மென்மையாக்கும். இதற்கு நன்கு புளித்த தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக அடிக்கவும். அதன் பிறகு, அதை முடிக்கு தடவவும். இதனால் உங்கள் முடி மென்மையாக மாறும்.

இதையும் படிங்க:  இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா இனி நீங்களும் ஷாம்புவிற்கு பிறகு கண்டிஷனர் யூஸ் பண்ணுவீங்க!

இது தவிர முட்டையின் வெள்ளை கருவை போட்டு.. அதனுடன் புளிப்பு தயிர் சேர்த்து.. நன்கு கலக்கவும். இப்போது இந்த கலவையானது கூந்தலுக்கு அதிக அழகையும் பொலிவையும் தருகிறது.

இதையும் படிங்க:  பெண்கள் தலைமுடி உதிர்வுக்கு இதுதான் காரணம்.. அதை எப்படி நிறுத்துவது தெரியுமா..?

ஒரு பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் புளித்த தயிர் எடுத்து இந்த கலவையை நன்கு கலந்து முடியில் தடவவும். 30 நிமிடங்கள் கழித்து 
ஷாம்பூ போட்டு குளிக்க வேண்டும்..

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அதுபோல், கற்றாழை ஜெல் மற்றும் தயிரை மிக்ஸியில் போட்டு அரைத்து அதை தலையில் தடவவும். இதனால் முடி நன்றாக வளரும் மற்றும் பளபளப்பாக இருக்கும்.

தயிர், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்கள் மற்றும் ஆமணக்கு எண்ணெய் கலந்து ஹேர் பேக் தயாரிக்கவும். இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவவும், பின்னர் ஷாம்பு போட்டு குளிக்கவும். இது முடி உதிர்வை தடுக்கிறது. முடி பளபளப்பாகவும் அழகாகவும் இருக்கும்.

click me!