Beauty Tips : வயதானாலும் முகத்தில் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்க பெஸ்ட் ஃபேஸ் பேக் இதுதான்!

First Published Apr 26, 2024, 3:34 PM IST

முதுமையில் முகத்தில் சுருக்கங்கள் வருவது இயற்கை தான். ஆனால் இளம் வயதிலேயே இந்த பிரச்சனைகள் வந்தால், இந்த எளிய ஃபேஸ் பேக்கை செய்து பாருங்கள்...

வயது கூட கூட முகத்தில் சுருக்கங்கள் வருவது சகஜம் தான். இதற்கு முக்கிய காரணம் சூரியனின் புற ஊதா கதிர்கள் தான். இந்த கதிர்களின் தாக்கங்களில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், ஏற்கனவே இருக்கும் சுருக்கங்களை நீக்கவும் சில வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை..

முட்டையின் மற்றும் எலுமிச்சை:  முட்டையின் வெள்ளை புரதம் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை அதிகரிப்பதன் மூலம் சுருக்கங்களை குறைக்கிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, சருமம் இறுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது.

தயாரிக்கும் முறை:  முட்டையின் வெள்ளைக்கருவில், ஒரு  ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து, அதை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து, பிறகு முகத்தை கழுவுங்கள். இப்படி செய்தால், நல்ல பலன்கள் கிடைக்கும்.

பாதாம் எண்ணெய் மற்றும் கேரட்: கேரட்டில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து, அழுக்குகளை நீக்கி, சருமத்திற்கு உறுதியை அளிக்கும். மேலும், இது சுருக்கங்களை நீக்கி, சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். பாதாம் எண்ணெயில் இருக்கும் வைட்டமின் ஈ, சருமத்தில் உள்ள கொலாஜன் இழப்பைத் தடுத்து, சருமத்தில் புதிய செல்கள் வளர உதவுகிறது.

தயாரிக்கும் முறை:  இரண்டு கேரட்டை தோலுரித்து மென்மையாக அரைக்கவும். பின் அதில் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை உங்கள் முகத்தில் தடவவும். பிறகு ஒரு மணி நேரம் கழித்து,வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சிறந்த முடிவை பெற வாரத்திற்கு மூன்று முறை செய்யுங்கள்.

இதையும் படிங்க:  இளம் வயதிலேயே முகத்துல சுருக்கமா...? கவலை வேண்டாம்.. குறைக்க சில அற்புதமான டிப்ஸ் இங்கே...

வெள்ளரிக்காய்:  வெள்ளரிக்காயில் இருக்கும் சத்துக்கள் முக சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும், இது சருமத்தில் உள்ள கறைகள் மற்றும் சுருக்கங்களை நீக்க உதவுகிறது. குறிப்பாக கண்ணின் கீழ் பகுதி கருமையை நீக்க சிறந்தது.

தயாரிக்கும் முறை:  அரை வெள்ளரிக்காயை தோலுரித்து அரைத்து எடுத்து கொள்ளுங்கள். பிறகு, அதில் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, உங்கள் முகத்தில் தடவவும். சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். 

இதையும் படிங்க:  தினமும் இரவு தூங்கும் முன் 'இத' முகத்தில் தடவுங்க... இனி முக சுருக்க பிரச்சினை வராது!

பப்பாளி: பப்பாளியில் இருக்கும் பப்பெய்ன் என்சைம், தோல் அடுக்கில் சிக்கியுள்ள இறந்த செல்களை அகற்றும் திறன் கொண்டது. மேலும், இதில் உள்ள சத்துக்கள் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரித்து, சருமத்தை பொலிவாகவும், சுருக்கம் இல்லாததாகவும் மாற்றுகிறது. இதனுடன், இதில் உள்ள ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் சருமத்திற்கு பொலிவையும் மென்மையையும் கொடுக்கும்.

தயாரிக்கும் முறை:  நன்கு பழுத்த பப்பாளியை அரைத்து அதை உங்கள் முகத்தில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இதை வாரம் இரண்டு முறை பின்பற்றி சிறந்த பலன் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!