Bayilvan Ranganathan: என்னது தளபதி விஜயின் மனைவி இந்த நடிகரின் முன்னாள் காதலியா? கொளுத்தி போட்ட பயில்வான்..!

First Published Jan 9, 2024, 10:05 PM IST

பல சர்ச்சையான விஷயங்களை விலாவாரியார் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும், பயில்வான் ரங்கநாகன் நடிகர் ஒருவரின் காதல் கிசுகிசு குறித்து மேடையில் பேச.. ரசிகர்கள் அந்த பொண்ணு தளபதி மனைவியா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 

தமிழ் சினிமாவில் படு மாஸாக ஹீரோவாக மட்டும் இல்லாமல், அரசியலுக்கு அடி போட்டு கொண்டிருக்கிறார் தளபதி விஜய். ஆரம்பத்தில், தன்னுடைய பட விழாக்களில் அரசியல் கருத்துக்களை பேச துவங்கி, சமீப காலமாக தீவிர மக்கள் பணியில் இறங்கியுள்ளார். விஜய் மக்கள் இயக்கம் மூலம், பலருக்கு உதவி செய்து வரும் தளபதி, சமீபத்தில் தூத்துக்குடி, நெல்லை, ஆகிய பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்தார்.
 

மற்றொரு புறம் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், விஜயின் மனைவியை குறிவைத்து பேசுவது போல் பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

Mid Week Eviction: செம்ம ட்விஸ்ட்! திடீர் என நடந்த மிட் வீக் எவிக்ஷன்.. வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர்!
 

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர் ஜெய் ஆகாஷ் நடித்துள்ள 'மாமரம்' என்கிற படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயில்வான், மேடைக்கு வந்து பேசியபோது, "ஜெய் ஆகாஷ் பற்றிய கிசுகிசு ஒன்று சொல்லப்போகிறேன் என குறிப்பிட்டு, அது முற்றிலும் உண்மையான தகவல் என கூறினார்.

Bayilvan Ranganathan

"ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வந்தார் என்றும், அந்த பெண்ணும் இவரும் காதலித்தனர் என்று கூறினார். ஆனால் கடைசியில் அந்த பெண் இவரை கழட்டிவிட்டு, மாஸ் ஹீரோ ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். இதை பயில்வான் சொல்லி முடித்ததுமே நடிகர் ஜெய் ஆகாஷ் உடனடியாக பயில்வான் அருகில் வந்து, இது பொய்யான தகவல் என்று கூறினார்.

பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு!
 

எனினும் பயில்வான் சொன்னதை அவர் மறுத்திருந்தாலும்... பயில்வான் கூறிய லண்டன் பொண்ணு, மாஸ் ஹீரோ போன்ற வார்த்தைகள் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு பொருந்துவதால், அவர் தான் ஆகாஷின் காதலியா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கிசுகிசு குறித்து பேசி விளக்கம் கொடுக்கும் பயில்வான் இதற்கும் விளக்கம் கொடுப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

click me!