என்னது ‘ரெட்ட தல’ அஜித் டிராப் பண்ண படமா? 10 ஆண்டு காத்திருந்து கைவிட்ட இயக்குனர் - அருண் விஜய் சொன்ன சீக்ரெட்

First Published Apr 24, 2024, 12:42 PM IST

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ரெட்ட தல என பெயரிடப்பட்டு உள்ள நிலையில், அந்த தலைப்பில் அஜித் ஒரு படத்தில் நடிக்க இருந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த தீனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஏ.ஆர்.முருகதாஸ். தீனா படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அஜித்தை வைத்து மிரட்டல் என்கிற தலைப்பில் ஒரு படத்தை இயக்க இருந்தார். அதற்காக போட்டோஷூட் எல்லாம் நடத்தி முடித்த பின்னர் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார் அஜித். பின்னர் அந்த கதையில் சூர்யாவை ஹீரோவாக நடிக்க வைத்து கஜினி என்கிற பெயரில் இயக்கி வெற்றி கண்டார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அஜித் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் டிராப் ஆனது மிரட்டல் படமட்டுமல்ல மற்றுமொரு படமும் உள்ளது. அந்த படம் தான் ரெட்ட தல. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது. ஆனால் இந்த படம் டேக் ஆஃப் ஆகாததால் அந்த தலைப்பு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசமே இருந்துள்ளது. தற்போது அதே தலைப்பில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிக்-அப் ஆன சன்னி லியோனின் பிசினஸ்! வெறும் 10 லட்சம் முதலீட்டில் தொடங்கிய தொழில்.. இன்று 10 கோடி வருமானம்

திருக்குமரன் இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ரெட்ட தல என பெயரிட்டுள்ளனர். இந்த தலைப்பை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் இருந்து வாங்கியதாக அருண் விஜய் சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் இந்த டைட்டிலை சுமார் 10 ஆண்டுகள் அவர் வைத்திருந்ததாகவும், தற்போது தாங்கள் கேட்டவுடன் கொடுத்துவிட்டதாகவும் அருண் விஜய் தெரிவித்திருக்கிறார். 

தற்போது அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல படத்தை இயக்கும் திருக்குமரன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் மற்றும் சித்தி இத்னானி நடிக்கின்றனர். பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு சாம் சி.எஸ்.இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... பேன்ட் போட மறந்துடீங்களா? 'ஃபயர்' படத்தில் கவர்ச்சியில் வெறியேற்றும் ரச்சித்தா மகாலட்சுமி! வெளியானது கிலிம்ஸி!

click me!