Ajith Movie: படப்பிடிப்பு துவங்கும் முன்பே... பல கோடிக்கு விற்பனையான 'குட் பேட் அக்லி'! மாஸ் காட்டும் அஜித்!

First Published Apr 30, 2024, 3:04 PM IST

தல அஜித், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு துவங்கும் முன்பே, இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பல கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகர் அஜித் கடைசியாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்த துணிவு திரைப்படம் வெளியாகி, வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிப்பார் என எதிர்பார்ப்பட்டது. ஆனால் விக்கி கூறிய கதை படக்குழுவினருக்கும், அஜித்துக்கும் திருப்தியை ஏற்படுத்தாத நிலையில், இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்டார்.

விக்கிக்காக, நயன்தாரா அஜித்தை சந்தித்து பேசிய போதும், விக்கி கையை விட்டு நழுவியது இப்படம். இதை தொடர்ந்து, தற்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தை, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.  சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நிறைவடைந்த நிலையில்... இறுதிக்கட்ட படப்பிடிப்புக்கு படக்குழு தயாராகி வருகிறது.

Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!

அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு, நிறைவடைவதற்கு முன்பே... AK ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. நாளை அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. 

மேலும் இப்படத்தில் அஜித்துடன் தெலுங்கு திரையுலகில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா நடிக்க உள்ளார். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், இந்த தகவல் கிட்ட தட்ட உறுதியாகிவிட்டதாகவும், இவர்களை தவிர மீனா, சிம்ரன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Ajith: கடைசி நேரத்தில் முட்டிக்கிச்சு! அஜித் நடிக்க வேண்டிய ஹிட் பட வாய்ப்பை தட்டி தூக்கிய நடிகர் பிரஷாந்த்.!

Good Bad Ugly Movie

இது ஒருபுறம் இருக்க, 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பு கூட இன்னும் துவங்காத நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமை ரூ. 22 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார். இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!