Makhana : காலையில் வெறும் வயிற்றில் மக்கானா சாப்பிடுங்க.. 'Slim' ஆகுவது உறுதி!

First Published Apr 24, 2024, 7:30 AM IST

தினமும் காலை வெறும் வயிற்றில் மக்கானா சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்..
 

உங்களுக்கு தெரியுமா.. தாமரை விதையில் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். புரதம், நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு மிகவும் முக்கியம். அவை இதில் உள்ளன. மேலும் இது ஒரு சூப்பர்ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது.

வெறும் வயிற்றில் தாமரை விதையைச் சாப்பிட்டால் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். அவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்வோம் வாருங்கள்..

தாமரை விதையில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது எடை இழப்புக்கு உதவுகிறது. அதே நேரத்தில் , இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும், மீண்டும் மீண்டும் பசி எடுக்காது. சொல்லபோனால், இது உணவு அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். இது எடையைக் கட்டுப்படுத்தும்.

அதுமட்டுமின்றி, இதில் நல்ல கொழுப்பு உள்ளது. அவை அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சில நாட்களில் வயிற்றைச் சுற்றிக் கொழுப்புச் சத்து குறையும். மேலும் எலும்புகளை வலுவாக்கும், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கும், குறிப்பாக இதன் நுகர்வு உயர் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மக்கானா நார்ச்சத்து அதிகம். எனவே இது செரிமான செயல்முறையை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளைத் தடுக்கிறது. மகானா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். மக்கானாவில் மெக்னீசியம் அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் உள்ளது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. 

மேலும் இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதை நீங்கள் நெய்யில் வறுத்து, காலை மற்றும் மாலையில் கிரீன் டீயுடன் சாப்பிடலாம். இது சாப்பிட சுவையாக இருப்பது மட்டுமின்றி, உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

தாமரை விதை சாட் செய்வது எப்படி?:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாமரை விதை சாட் செய்து சாப்பிடலாம். இதற்கு ஒரு பாத்திரத்தில் வறுத்த தாமரை இலை,,
பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொஞ்சம் வறுத்த வேர்க்கடலை, சிறிதளவு கருப்பு மிளகு தூள், சாட் மசாலா, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கு தேவையான உப்பு. அவ்வளவுதான், டேஸ்டான மக்கானா சாட் ரெடி!! இதை நீங்கள் காலை உணவாக சாப்பிட்டால், விரைவில் பசி எடுக்காது. இதனால் உங்கள் எடையைக் கட்டுப்படுத்துவது மிகவும் எளிது..

click me!