விடாமுயற்சிக்கு விடிவுகாலம் வந்தாச்சு... ஒருவழியாக ஆரம்பமாக உள்ள இறுதிக்கட்ட ஷூட்டிங் - அதுவும் எங்க தெரியுமா?

First Published Mar 7, 2024, 3:30 PM IST

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் ஹீரோவாக நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

நடிகர் அஜித்தின் 62-வது திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் நடிக்கின்றனர். நடிகை ரெஜினா கசெண்ட்ராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

விடாமுயற்சி முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படம் என்பதால் அப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் வெளிநாட்டிலேயே நடத்தினர். இதற்காக கடந்தாண்டு அக்டோபர் மாதம் அஜர்பைஜான் நாட்டுக்கு சென்ற படக்குழு, அங்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இடைவிடாது படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இதையடுத்து புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இந்தியா வந்த படக்குழு, பின்னர் மீண்டும் அங்கு சென்று எஞ்சியுள்ள படப்பிடிப்பை நடத்தியது.

இதையும் படியுங்கள்... நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏகே - பின்னணி என்ன?

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிய சமயத்தில் அங்கு மோசமான வானிலை காரணமாக ஷூட்டிங் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் உருவானது. இதனால் ஜனவரி மாத இறுதியில் மீண்டும் சென்னை திரும்பியது படக்குழு. இதையடுத்து ஒரு மாதம் ஆகியும் எஞ்சியுள்ள படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகாததால், விடாமுயற்சி திரைப்படம் பைனான்ஸ் பிரச்சனையில் சிக்கி இருப்பதாக சர்ச்சை வெடித்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வருகிற மார்ச் 15-ந் தேதி தொடங்க உள்ளதாம். அஜர்பைஜான் நாட்டில் தான் அந்த படப்பிடிப்பை நடத்த உள்ளார்களாம். இன்னும் 30 முதல் 40 நாள் படப்பிடிப்பு மட்டுமே உள்ளதாம். அதை ஒரே கட்டமாக முடித்துவிட்டு படக்குழு ஏப்ரல் மாத இறுதியில் சென்னை திரும்பும் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... "அதில் நாங்க தான் மெயின்.. அவ்ளோ தான் சொல்லமுடியும்".. லோகேஷின் LCU குறும்படம் - காளிதாஸ் தந்த ஸ்வீட் ஷாக்!

click me!