Ajith Shalini : 24வது திருமணநாளை 5 ஸ்டார் ஹோட்டலில் ஜம்முனு கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி - வைரலாகும் போட்டோஸ்

First Published Apr 24, 2024, 2:52 PM IST

நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் ஜோடியாக பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்களது திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித்தும், நடிகை ஷாலினியும் முதன்முறையாக அமர்க்களம் படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தனர். அப்படம் இவர்கள் இருவரது வாழ்க்கையிலும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஏனெனில் அப்படத்தில் நடித்தபோது தான் அஜித்தும் ஷாலினியும் காதல் வயப்பட்டனர். அப்படம் சக்சஸ் ஆனதை போல் அவர்களது காதலும் சக்சஸ் ஆனதால் கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்த ஷாலினி, அதன்பின்னர் சினிமாவை விட்டே ஒட்டுமொத்தமாக விலகினார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி 24 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றளவும் குறையாத காதலுடன் இருவரும் வாழ்ந்து வருகின்றனர். பல காதலர்களுக்கு முன்னுதாரணாமவும் இவர்கள் திகழ்ந்து வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... 250 கோடி இல்ல... அதுக்கும் மேல; கூலி படத்துக்காக ரஜினிக்கு வாரி வழங்கப்பட்ட சம்பளம் - அதுவும் இத்தனை கோடியா?

இந்த நிலையில், அஜித் - ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி இன்றுடன் 24 ஆண்டுகள் ஆகிறது. அவர்கள் தங்களது திருமண நாளை ஜோடியாக கொண்டாடி உள்ளனர். சென்னையில் உள்ள லீலா பேலஸ் என்கிற பைவ் ஸ்டார் ஹோட்டலில் அஜித் - ஷாலினி ஜோடி தங்களது திருமண நாளை கொண்டாடியபோது அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அஜித் கோட் சூட்டிலும், ஷாலினி சுடிதாரிலும் ஜோடியாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் - ஷாலினி ஜோடிக்கு சமூக வலைதளங்களிலும் திருமண நாள் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அதேபோல் திரையுலக பிரபலங்களும் அஜித் - ஷாலினி ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். வருகிற மே 1-ந் தேதி நடிகர் அஜித்தின் பிறந்தநாள் வருவதால் அதை தடபுடலாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். அன்றைய தினம் மங்காத்தா திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் ரசிகர்கள் செம்ம ஹாப்பியாக உள்ளனர்.

இதையும் படியுங்கள்... Simbu: ஹன்சிகாவை காதலித்த 2 மாதத்தில் இத்தனை கோடி செலவு செய்தார் சிம்பு! ஆனால்? ரகசியத்தை உடைத்த பிரபலம்!

click me!