தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் லால் சலாம்... ஓடிடிக்கு பார்சல் பண்ணி அனுப்பிய படக்குழு - எப்போ ரிலீஸ்?

First Published Feb 22, 2024, 8:33 AM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Lal salaam

தனுஷின் 3 படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதையடுத்து வை ராஜா வை படத்தை இயக்கிய ஐஸ்வர்யா, கடந்த 8 ஆண்டுகளாக சினிமாவை விட்டு விலகியே இருந்தார். இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு நடிகர் தனுஷுடன் மனக்கசப்பு ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்த ஐஸ்வர்யா, சினிமாவிலும் படிப்படியாக கவனம் செலுத்த தொடங்கினார். முதலில் ஆல்பம் பாடல் ஒன்றை இயக்கினார் ஐஸ்வர்யா.

Lal salaam Rajinikanth

இதையடுத்து அவருக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் லால் சலாம். இப்படத்தை லைகா நிறுவனம் சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது. இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இதுதவிர விஷ்ணு விஷால், விக்ராந்த், நீரோஷா, தம்பி ராமையா, செந்தில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.

இதையும் படியுங்கள்... பாபா தோல்விக்கு பின் தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூடிய ரஜினி... சூப்பர்ஸ்டாரின் இந்த முடிவுக்கு காரணம் இவரா?

Lal salaam OTT release

ரஜினிகாந்த் நடித்திருந்ததால் இப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்னர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் லால் சலாம் படம் முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட வாஷ் அவுட் ஆனது. இப்படத்தின் மொத்த வசூல் இதுவரை 20 கோடியை கூட எட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் இப்படமும் ஐஸ்வர்யாவின் பிளாப் லிஸ்ட்டில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Lal salaam OTT release Date

இந்நிலையில், தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் லால் சலாம் திரைப்படத்தை வேறு வழியின்றி ஓடிடிக்கு தள்ளிவிட்டுள்ளார்களாம். அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறது. அந்நிறுவனம் இப்படத்தை மார்ச் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதனால் லால் சலாம் திரைப்படம் வருகிற மார்ச் 8-ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 3 படம் பிளாப் ஆனதற்கு அனிருத்தின் பாட்டு தான் காரணமா? புது குண்டை தூக்கிப்போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

click me!