நடிகை விஜி சந்திரசேகரின் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்! சூர்யா, உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நேரில் வாழ்த்து

First Published Jan 23, 2024, 12:03 PM IST

பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மூத்த மகள், சுரக்ஷா சந்திரசேகருக்கு மிக பிரமாண்டமாக தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், இதுகுறித்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

பிரபல நடிகை சரிதாவின் தங்கையும், நடிகையுமான விஜி சந்திரசேகரின் மூத்த மகள் சுரக்ஷா சந்திரசேகருக்கும், தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் இதோ..

80-களில் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை சரிதா. இவரைத் தொடர்ந்து இவரது தங்கை விஜய் சந்திரசேகர், 1981 ஆம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய நகைச்சுவை திரைப்படமான 'தில்லு முல்லு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

Bigg Boss Aishu: 'என்னை மன்னித்து விடுங்கள்' அம்மா பிறந்தநாளில்.. பிக்பாஸ் ஐஷு போட்ட உருக்கமான பதிவு!

இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சகோதரியாக விஜி நடித்திருந்தார். இந்த படம் வெற்றி அடைந்த போதிலும், விஜி சந்திரசேகர் படிப்பில் கவனம் செலுத்தி வந்ததால், தன்னை தேடி வந்த திரைப்பட வாய்ப்புகளை தவிர்த்ததாக கூறப்படுகிறது.

தன்னுடைய படிப்பை முடித்த பின்னர், தெலுங்கில் கலியுகம் என்கிற திரைப்படத்தில் நடித்த விஜி கன்னட , மலையாளம் தோன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்தார்.

Saif Ali Khan Hospitalised: நடிகர் சைஃப் அலி கான் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது!

'தில்லு முல்லு' படத்திற்கு பின்னர், தமிழில் 1993 ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கு சீமையிலே' திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்த விஜி சந்திரசேகர் தொடர்ந்து தமிழில் தரமான குணசித்ர வேடங்களை தேர்வு செய்து நடித்து கலக்கி வருகிறார்.

அந்த வகையில் பிரியங்கா, தேவி ஐஏஎஸ், பார்த்தாலே பரவசம், சமஸ்தானம், ஆயுத எழுத்து, ஜோர், அரோகணம், போன்ற பல படங்களில் தன்னுடைய பர்ஃபாமென்ஸால் மிரட்டினார். சமீபத்தில் வெளியான 'கேப்டன் மில்லர்' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும் டி என் ஏ, இயக்குனர் கோபி நயினார் இயக்கி வரும் திரைப்படம் என இவரின் கைவசம் பல படங்கள் உள்ளன.

Bhavana wedding Photos: 6-ஆம் ஆண்டு திருமண நாள்! யாரும் பார்த்திராத வெட்டிங் போட்டோசை பகிர்ந்த நடிகை பாவனா!

திரைப்படங்களை தாண்டி ஏராளமான சீரியல்களிலும் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார். குறிப்பாக சந்திரகுமாரி சீரியலில், ராதிகா விலகிய பின்னர் அவருடைய கதாபாத்திரத்தில் விஜய் சந்திரசேகர் நடித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜி சந்திரசேகர் நடிகையாக இருக்கும் போதே, 1995 ஆம் ஆண்டு சந்திரசேகர் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நடிகையாக இருப்பது மட்டுமின்றி தன்னுடைய கணவரின் தொழிலையும் கவனித்து வருகிறார்.

பெரியப்பா ஆனார் சிம்பு! டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசனுக்கு குழந்தை பிறந்தாச்சு.. என்ன குழந்தை தெரியுமா

இந்த தம்பதிக்கு லவ்லின், சுரக்ஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். விஜய சந்திரசேகரின் இரண்டாவது மகள் லவ்லின் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில், மூத்த மகளான சுரக்ஷாவுக்கு தற்போது தொழிலதிபருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

விஜய் சந்திரசேகர் மகளின் திருமணத்தில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து உள்ளனர். 80ஸ் கதாநாயகிகள் சீதா, ராதிகா, ஜெயஸ்ரீ போன்ற பலர் கலந்து கொண்டுள்ளனர். அதே போல்  நடிகர் சூர்யா, அருண் விஜய், சமுத்திரகனி, மோகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தங்கையின் நிச்சயதார்த்தத்தில் குடும்பத்துடன் சேர்ந்து கியூட்டாக படுகா டான்ஸ் ஆடிய சாய் பல்லவி - வைரல் வீடியோ

click me!