ஓடும் பேருந்தில் பயங்கரம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் பலி! தற்கொலையா? தவறுதலாக நடந்ததா? விசாரணை!

Published : May 19, 2024, 09:44 AM ISTUpdated : May 19, 2024, 09:47 AM IST
ஓடும் பேருந்தில் பயங்கரம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து CISF வீரர் பலி! தற்கொலையா? தவறுதலாக நடந்ததா? விசாரணை!

சுருக்கம்

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர்கள் 3 ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஓடும் பேருந்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பணிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவை சேர்ந்த வீரர்கள் 3 ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  இரவு நேர பாதுகாப்பு பணிகளை முடித்து விட்டு இன்று காலை ஒரே பேருந்தில் சுமார் 40 மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது தலைமை அலுவலகத்துக்கு பேருந்தில் திரும்பியதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: Rain Alert: அடுத்த 3 மணிநேரத்தில் 8 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை! வானிலை மையம் அலர்ட் மெசேஜ்!

அப்போது, சதுரங்கப்பட்டினம் கோட்டை அருகே சாலையில்  பேருந்து வந்துக்கொண்டிருந்த போது, துப்பாக்கியுடன் பேருந்தில் பயணித்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரவி கிரண் (37) என்பவரின் (இன்சாஸ் பட் என்-68) துப்பாக்கி வெடித்துள்ளது. இதில், வெளியே வந்த குண்டு அவரின் வலது பக்க கழுத்தில் பாய்ந்து பேருந்தின் மேல் பகுதியில் பட்டு வெளியில் சென்றுள்ளது. இதில், ரவி கிரண் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் மற்றும் சிஐஎஸ்எப் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதையும் படிங்க:  Tamilnadu School ReOpen: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்..!

மேலும், உடலை மீட்டு கல்பாக்கம் நகரியப்பகுதியில் உள்ள அணுசக்தி மருத்துவமனைக்கு பேருந்தை கொண்டு வந்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து சட்ராஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  துப்பாக்கி தவறுதலாக சுட்டதா? அல்லது இவரே தற்கொலை செய்து கொண்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

ரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!