வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
வேலூர் அருகே கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக இளைஞரணி மாவட்டத் தலைவர் ரவுடி கிளி (எ) சதீஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் இளைஞர் ஒருவர் அந்த வழியாக இருசக்கர வாகனம் மற்றும் நடந்து செல்வோர்களை மடக்கி கத்தியை காட்டி பணம் பறிப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு வெட்டுவாணம் அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (37) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டியவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு!
விசாரணையில் அவர் பள்ளிகொண்டா கட்டுப்புடி தெருவை சேர்ந்த கிளி (எ) சதீஷ் (37) என்பது தெரியவந்தது. இவர் வேலூர் மாவட்ட பாஜ இளைஞரணி மாவட்ட தலைவராக இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சதீஷ் மீது மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இவர் மீது கொலை, வழிப்பறி என பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க: என் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை! வெளியான பகீர் தகவல்!