10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; வலி தாங்காமல் கதறியதால் பிடிபட்ட 60 வயது முதியவர்

By Velmurugan s  |  First Published May 15, 2024, 1:01 PM IST

திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 60 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சத்யா (வயது 35) என்பவருக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சத்யா அவரது கணவர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருகில் உள்ள நிலத்தில் கேழ்வரகு அறுவடை செய்ய சென்று உள்ளனர். 

5ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது ஊசிநாட்டான் வட்டம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் (வயது 60) என்பவர் அவரது மனைவி இறந்த நிலையில் வக்கணம்பட்டி பகுதியில் உள்ள அவரது மகள் மேனகா வீட்டில் வசித்து வந்துள்ளார். அனைவரும் அவரவர் வேலைக்கு சென்ற நிலையில் தங்கவேல் தனியாக இருந்த சிறுமியை கண்டு அக்கம் பக்கம் நோட்டம் போட்டு அந்த பெண் பிள்ளையை அழைத்து மடியின் மீது உட்கார வைத்து தகாத செயலில் ஈடுபட்டுள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

பெண் காவலர்கள் குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்த சவுக்கு சங்கர் பெண் காவலர்கள் பாதுகாப்போடு திருச்சி அழைத்து வரப்பட்டார்

ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து அவரது வேலையை காட்டி உள்ளார். இதனால் அலறிய சிறுமியை அப்படியே விட்டு சென்றுள்ளார். பின்னர் இது குறித்து யாருக்கும் சொல்லாமல் பெண் அந்த சிறுமி இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் உடலில் வலி இருந்த காரணத்தினால் அவரது தாயார் சத்யாவிடம் நடந்த சம்பவதை சிறுமி கூறி உள்ளார். 

கறுப்பு பணத்தை வெள்ளை பணமா மாத்துறேனா? சமூக வலைதளத்தில் பரவும் கருத்துக்கு பாலா முற்றுப்புள்ளி

இதை தங்கவேல் தரப்பினர் மறுத்து அவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான திருப்பதி - சத்யா தம்பதியினர் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய போலிசார் சிறுமி கூறிய தகவலின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தங்கவேலுவை சிறையில் அடைத்தனர்.

click me!