
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரியின் மகன் துரை தயாநிதி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவர் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவப் பரிசோதனைகளில் அவருக்கு மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும், அதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அடுத்த சில நாட்களுக்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தனது அப்பாவுக்கும் சித்தப்பா ஸ்டாலினுக்கும் இடையே மனக்கசப்பு இருப்பினும் கூட, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறவினர்களோடு தொடர்ந்து நல்லுறவை பேணி வந்தவர் துரை தயாநிதி.
சமீபத்தில் மூளை ரத்த நாளத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டதால் மார்ச் மாதம் 14 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் துரை தயாநிதி.
இந்நிலையில், சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் கிடையாது.. ரஜினி கிடையாது.. தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர் இவர்தான் தெரியுமா?