Samantha : பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த பல்லாவரம் பொண்ணு.. நடிகை சமந்தாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

First Published Apr 28, 2024, 8:48 AM IST

நடிகை சமந்தா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Samantha

பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர் தான் சமந்தா. இவரை சினிமாவில் நடிகையாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கவுதம் மேனன். அவர் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தமிழ் வெர்ஷனில் செகண்ட் ஹீரோயினாக நடித்திருந்த சமந்தா, அதே படத்தின் தெலுங்கு வெர்ஷனில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்தார். 

samantha Ruth Prabhu

ஒரே படத்தின் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் அறிமுகமான சமந்தாவுக்கு முதல் படமே செம்ம ஹிட் அடித்ததால் தெலுங்கில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இதனால் டோலிவுட்டில் டாப் ஹீரோயினாக உருவெடுத்த சமந்தா, பின்னர் தமிழில் அதர்வா ஜோடியாக பாணா காத்தாடி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார்.

Samantha Birthday

பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படம் மூலம் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்த சமந்தா, அடுத்தடுத்து அவருடன் தெறி, மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் படங்களில் கூட்டணி அமைத்து சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வந்தார். தமிழில் விஜய் மட்டுமின்றி தனுஷ், சிவகார்த்திகேயன், சூர்யா, விஷால் போன்ற டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா.

Samantha Movies

நடிகை சமந்தாவுக்கு சினிமா வாழ்க்கை சக்சஸ்புல்லாக அமைத்தபடி காதல் வாழ்க்கை சக்சஸ்புல்லாக அமையவில்லை. முதலில் சித்தார்த் உடனான காதல் வாழ்க்கை தோல்வியில் முடிந்ததை அடுத்து. தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மீது காதல் வயப்பட்டார் சமந்தா. அந்தக்காதல் திருமணத்தில் முடிந்தாலும், அந்த திருமண வாழ்க்கை நான்கே ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

Samantha age

நாக சைதன்யா உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் சமந்தா. விவாகரத்துக்கு பின்னர் இந்தியிலும் நடிக்கத் தொடங்கி பான் இந்தியா நடிகையாக உருவெடுத்ததால் சமந்தாவின் சினிமா கெரியரும் மளமளவென உயர்ந்து டாப் கியரில் சென்றுகொண்டிருந்தது.

இதையும் படியுங்கள்... Shruti Haasan : பொன் நகை போர்த்திய வண்ண தேர்.. கவர்ச்சியில் மிளிரும் நாயகி ஸ்ருதிஹாசன் - லேட்டஸ்ட் பிக்ஸ்!

samantha salary

இந்த நிலையில் தான் அவருக்கு எமனாக வந்தது மயோசிடிஸ். இந்த அரியவகை நோய் பாதிப்பால் படாத பாடு பட்ட சமந்தா, சுமார் ஓராண்டு சிகிச்சைக்கு பின்னரே அதில் இருந்து படிப்படியாக மீண்டார். தற்போது அதற்கான சிகிச்சை எடுப்பதற்காக கடந்த ஓராண்டாக எந்தபடத்திலும் அவர் நடிக்கவில்லை.

samantha Net worth

இந்நிலையில், நடிகை சமந்தா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. தற்போது அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். அதன்படி நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.100 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.

samantha car collection

அதுமட்டுமின்றி அவருக்கு சொந்தமாக மும்பை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடுகளும் உள்ளன. இதில் ஐதராபாத்தில் உள்ள அவரின் ஆடம்பர பங்களாவின் மதிப்பு மட்டும் ரூ.7 கோடிக்கு மேல் இருக்குமாம். இதுமட்டுமின்றி சமந்தாவிடம் 2.26 கோடி மதிப்புள்ள லேண்ட் ரோவர், போர்ச், ஆடி, ஜாகுவார் போன்ற சொகுசு கார்களும் உள்ளன.

samantha business

நடிகை சமந்தா சினிமாவை போல் பிசினஸிலும் கொடிகட்டிப்பறந்து வருகிறார். அவர் கடந்த 2020-ம் ஆண்டு சாஹி என்கிற ஆடை நிறுவனத்தை தொடங்கினார். அதுமட்டுமின்றி மழலையர் பள்ளி உள்பட ஏராளமான பிசினஸில் முதலீடு செய்து அத்ன் மூலம் கோடி கோடியாய் வருமானம் ஈட்டி வருகிறார் சமந்தா.

இதையும் படியுங்கள்... Jyotika Photos: 45 வயதிலும்... 20 வயசு யங் ஹீரோயின் லுக்கில் மாடர்ன் உடையில் கலக்கும் ஜோதிகா! கியூட் போட்டோஸ்!

click me!