நிஜமாவே Great தான்.. சாய் பல்லவி எல்லா பாட்டுக்குமே இப்படி தான் டான்ஸ் ஆடுனாங்களாம்..

First Published Mar 14, 2024, 12:17 PM IST

தனது டான்ஸ் அனுபவம் குறித்து சாய்பல்லவி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான சாய் பல்லவி தென்னிந்தியா முழுவதும் கவனம் பெற்றார். அந்த படத்தில் அவர் ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாப்பத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாய் பல்லவி அடுத்தடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் படங்களில் நடிக்க தொடங்கினார்.

மாரி 2, என்.ஜி.கே, உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கினார். இதனிடையே தெலுங்கில் ஷ்யாம் சிங்க ராய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கினார்.

சாய் பல்லவி நடிகையாக இருந்தாலும், அவர் முதல் டான்சராக விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். அந்த ஷோவிலேயே சாய் பல்லவி டான்ஸில் கலக்கி இருப்பார். தனது படங்களிலும் தனது நடனம் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் சாய் பல்லவி. அந்த வகையில் மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலில் சாய்பல்லவியின் நடனம் வெகுவாக பாராட்டப்பட்டது. 

தமிழில் சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சாய் பல்லவி. சமீபத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்திலும், தண்டல் என்ற தெலுங்கு படத்திலும் சாய் பல்லவி நடித்து வருகிறார். இவை தவிர ராமாயணத்தை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ஹிந்தி படத்திலும் சீதையாக சாய் பல்லவி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனது டான்ஸ் அனுபவம் குறித்து சாய்பல்லவி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசி உள்ள அவர் “ ஷ்யாம் சிங்க ராய் படத்தில் ஒரு கிளாசிக்கல் பாட்டுக்கு நடனமாடி இருப்பேன். அந்த பாடலை தவிர இதுவரை நான் எந்த படத்தில் எல்லாம் டான்ஸ் ஆடினேனோ, அந்த நேரத்தில் நான் பீரியட்ஸில் இருந்தேன்.

மாரி 2 படத்தில் ரௌடி பேபி பாடலுக்கு டான்ஸ் ஆடும் போதும் அப்படி தான். மனதுக்கு பிடித்த ஒரு விஷயத்தை செய்யும் அதை மூளை ஏற்றுக்கொள்ளும், அதனால் அப்போது எனக்கு கஷ்டம் தெரியாது. ஆனால் சில நேரங்களில் டான்ஸ் ஆடி 2 - 3 நாள் கழித்து அதிகமாக சோர்வாக இருக்கும்.

அந்த நேரத்தில் என் அப்பா கால்களை பிடித்துவிடுவார். ரொம்ப விரும்பி ஒரு விஷயத்தை பண்ணும் வலி எல்லாம் தெரியாது” என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சாய்பல்லவி நிஜமாவே கிரேட் தான் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

click me!