ராதிகாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த 63 வயது நடிகர்! சரத்குமார் சொன்ன வார்த்தை! மேடையில் கேட்ட பிரபலம்!

First Published Mar 25, 2024, 3:21 PM IST

நடிகை ராதிகாவை பொது மேடையில்... 63 வயது நடிகர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நிலையில், இதற்கு சரத்குமார் ரியாக்ட் செய்தது பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.
 

நடிகை ராதிகாவை பொது மேடையில்... 63 வயது நடிகர் ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த நிலையில், இதற்கு சரத்குமார் ரியாக்ட் செய்தது பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

நடிகை ராதிகா, பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மகள் என்கிற அடையாளத்துடன்... தமிழ் சினிமாவில் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில், 1978-ஆம் ஆண்டு வெளியான 'கிழக்கே போகும் ரயில்' என்கிற படத்தில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக மாறிய நிலையில்... இதை தொடர்ந்து 'இனிக்கும் இளமை', 'நிறம் மாறாத பூக்கள்', 'சூலம்', 'பாமா ருக்மணி', 'பொய் சாட்சி', 'ரங்கா' போன்ற பல படங்களில் நடித்தார். 

என்னை சந்திக்க 10 நிமிடத்திற்கு 1 லட்சம்.. 1 மணிநேரத்திற்கு 5 லட்சம்! ஷாக் கொடுத்த நயன்தாரா பட வில்லன் நடிகர்!

குறிப்பாக விஜயகாந்த், ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும்... தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி, போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். நடிகர் பிரதாப் போத்தனுடன் நடிக்கும் போது அவரை காதலிக்க துவங்கிய ராதிகா 1985-ஆம் ஆண்டு அவரையே திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தில் பிரதாப் போத்தனிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியராதிகா... வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை 1990-ல் திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் ரேயான் என்கிற மகள் ஒருவரையும் பெற்றெடுத்தார். பின்னர் அவரிடம் இருந்தும் இரண்டே வருடத்தில் விவாகரத்து பெற்றார். வாழ்க்கையில் பல ஏற்றம் இறக்கங்களை சந்தித்து வந்தாலும், நடிப்பில் மட்டும் தொடர்ந்து கவனம் செலுத்திய ராதிகா தொடர்ந்து குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடித்தார்.

Super Singer Ajay Krishna: மகன் பிறந்த ஒரே வருடத்தில் புது வீட்டில் குடியேறிய அஜய் கிருஷ்ணா! குவியும் வாழ்த்து

பின்னர் நடிகர் சரத்குமாருக்கும் - ராதிகாவுக்கும் இருந்த நட்பு காதலாக மாறி திருமணத்தில் முடிந்தது. 2001-ஆம் ஆண்டு முதல் சந்தோஷமான தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். பல விஷயங்களில் இவர்களும் உள்ள புரிதல்... இளம் நட்சத்திர ஜோடிகளுக்கு ஒரு பாடமாக அமைகிறது என சிலர் நேரடியாகவே  கூறி உள்ளனர். மேலும் ராதிகா - சரத்குமாருக்கு ராகுல் என்கிற மகன் ஒருவரும் உள்ளார்.

சென்றமுறை நடந்த சட்டமன்ற தேர்தலில்... கணவர் சரத்குமாரை வெற்றிபெற வைக்க, திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் இருந்து முழுமையாக விலகி தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்தார். இதை தொடர்ந்து தற்போது நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், ராதிகா விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். ராதிகாவை வெற்றிபெற வைக்க வேண்டும் என சரத்குமார் தீவிரம் காட்டி வரும் நிலையில் , இவர்களின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் கல்யாணம்.. அதற்கு முன் நடந்த நிச்சயதார்த்த விருந்து - மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!
 

பட விழா ஒன்றில் கலந்து கொண்ட போது... மேடைக்கு வந்த நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா சரத்குமாருக்கு கை கொடுத்து விட்டு, ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து ஃபார்மலாக முத்தம் கொடுத்தார். இதை பார்த்த சரத்குமார் பாலகிருஷ்ணாவுக்கு தன்னுடைய கையில் இருந்த மைக்கை அவருக்கு கொடுக்காமல், அவங்களை மட்டும் கட்டிப்பிடித்து வரவேற்கும் நீங்கள்... எனக்கு மட்டும் கை கொடுப்பது நியாயமா என கேட்க... அதற்கு சரத்குமாரிடம் மன்னிப்பு கேட்ட பாலகிருஷ்ணா, அவரையும் கட்டி பிடித்து வரவேற்றார்.

மேலும் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து, சரத்குமார் தன்னுடைய மனைவியை கட்டிப்பிடித்த 63 வயது நடிகர் மீது எந்த ஒரு கோபமும் இல்லாமல்... இப்படி கிண்டலாக பேசியது இவர்கள் இருவரிடம் உள்ள நல்ல புரிதலை காட்டுவதாக கூறி வருகிறார்கள். 

'அலைபாயுதே' படத்தில் ஷாலினிக்கு முன் ஹீரோயினாக நடிக்க இருந்தது இந்த பாடகியா? யாருனு தெரிஞ்சா அசந்துடுவீங்க!

click me!