இலவசமாக இருக்கும் 5G சேவைக்கு கட்டணம் வசூலிப்பதுடன், 4G கட்டணமும் உயர்த்தப்படுவதால் போனுக்காகச் செய்யும் செலவு எக்கச்சக்கமாக அதிகரிக்கும்.
தற்போது கிடைக்கும் பெரும்பாலான போன்களில் இரண்டு சிம் ஸ்லாட்டுகள் இருக்கின்றன. எனவே ஒருவர் இரண்டு சிம்களைப் பயன்படுத்தலாம். ஆனால், வரும் நாட்களில் 2 சிம் கார்டுகளை வைத்திருப்பது காஸ்ட்லியாக மாறக்கூடும். இது தொடர்பாக, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா இணைந்து ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளன.
தொலைத்தொடர்புத் துறையில் விரைவில் கட்டண உயர்வு அதிகரிக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன. இதற்கு முன் டிசம்பர் 2021 இல், தொலைத்தொடர்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டன. அதிலிருந்து இரண்டரை ஆண்டுகளுக்கும் மேல் ஆகியும் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் திட்டங்களில் மாற்றம் இல்லை.
இதுபோன்ற சூழ்நிலையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை அடுத்த சில மாதங்களில் தங்கள் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரிக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
7 ரூபாய் முதலீடு செய்தால் போதும்... முதுமையில் ரூ.5,000 பென்ஷன் கிடைக்க கேரண்டி!
2 சிம் கார்டுகள்:
போனில் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு பிரச்சனை வரலாம். அதாவது, இரண்டாவது சிம் ஆக்டிவாக இருக்கஅதிக விலை கொடுக்க வேண்டியிருக்குலாம். தற்போது, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா சிம் கார்டுகளை செயலில் வைத்திருக்க, குறைந்தபட்சம் ரூ.150 க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ஆனால் கட்டண உயர்வுக்குப் பிறகு, இது ரூ.150க்குப் பதிலாக ரூ.180 முதல் ரூ.200 வரை இருக்கக்கூடும். இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தினால், குறைந்தபட்சம் ரூ.400 க்கு மாதம்தோறும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
விலை எவ்வளவு உயரும்?
இப்போதும் மாதந்தோறும் ரூ.300க்கு ரீசார்ஜ் செய்தால், கட்டண உயர்வுக்குப் பிறகு மாதத்திற்கு சுமார் ரூ.75 அதிகமாகச் செலுத்த வேண்டியிருக்கும். மாதந்தோறும் ரூ.500 ரீசார்ஜ் செய்தால் ரூ.125 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் விரைவில் 5G ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. இவை இப்போது 5G சேவைநை முற்றிலும் இலவசமாக வழங்கி வருகின்றன. இந்நிலையில், ஒரு 5G சிம், ஒரு 4G சிம் வைத்திருந்தால், மாதாந்திர செலவு சுமார் 50 சதவீதம் அதிகரிக்கும். 5G திட்டத்தின் விலை 4G திட்டத்தை விட அதிகமாக இருக்கும். இப்போது இலவசமாக இருக்கும் 5G சேவைக்கு கட்டணம் வசூலிப்பதுடன், 4G கட்டணமும் உயர்த்தப்படுவதால் போனுக்காகச் செய்யும் செலவு எக்கச்சக்கமாக அதிகரிக்கும்.
பஜாஜ் சிஎன்ஜி பைக் எப்போ ரிலீஸ் ? பைக் பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் அப்டேட் கொடுத்த பஜாஜ்!