9ஆவது வரிசையில் இறங்க, ஏன் விளையாடனும்? தோனி விளையாடாமலேயே இருக்கலாம் – ஹர்பஜன் சிங்!

First Published May 6, 2024, 3:24 PM IST

9ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய வருவதற்கு போட்டியில் விளையாடாமலேயே இருக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

வருடத்திற்கு ஒரு முறை தான் தோனியின் தரிசனம் கிடைக்கிறது. அதுவும், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படி கிடைக்கும் தோனியின் தரிசனத்தை பார்ப்பதற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறனர். அப்படியிருக்கும் நிலையில், தோனியின் ஒவ்வொரு அசையும் ஏராளமானோர் ரசிக்கின்றனர்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இந்த நிலையில் நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான 53ஆவது லீக் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, 17ஆவது ஓவரில் தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷர்துல் தாக்கூர் களமிறங்கினார். அவர் 17 ரன்களில் ஆட்டமிழந்த போது, தோனி 18.4ஆவது பந்தில் 9ஆவது வரிசையில் களமிறங்கினார்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இதன் மூலமாக முதல் முறையாக தோனி 9ஆவது வரிசையில் களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னதாக ஒரு விக்கெட் கீப்பராக 9ஆவது வரிசையில் களமிறங்கியவர்களின் பட்டியலில் மகேஷ் ராவத் (ஆர்ஆர், 2008 -2009) 6 முறை 9ஆவது வரிசையில் களமிறங்கியுள்ளார்.

IPL 2024

பினால் ஷா (மும்பை இந்தியன்ஸ், 2009) 2 முறையும், உதய் கவுல் (பஞ்சாப் கிங்ஸ், 2008) ஒரு முறையும், விருத்திமான் சகா (சன்ரைசர்ஸ் ஹைதராபாத், 2021) ஒரு முறையும், எம்.எஸ்.தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ், 2025) ஒரு முறையும் களமிறங்கியுள்ளனர்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தோனி 8 இன்னிங்ஸ்களில் 8ஆவது வரிசையில் களமிறங்கி விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

PBKS vs CSK 53rd IPL Match

சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த டேரில் மிட்செல் மற்றும் கெய்க்வாட் இருவரும் ஓரளவு தாக்குபிடித்து ரன்கள் எடுத்தனர். எனினும் கெய்க்வாட் 32 ரன்களில் ராகுல் சாஹர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே ஆறுச்சாமி ஷிவம் துபே கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

இதே போன்று மிட்செல் 30 ரன்கள் எடுத்த நிலையில், ஹர்ஷல் படேல் பந்தில் ஆட்டமிழந்தார். மொயீன் அலி 17, மிட்செல் சான்ட்னர் 11, ஷர்துல் தாக்கூர் 17 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடைசியாக வந்த தோனி கோல்டன் டக் முறையில் ஹர்ஷல் படேல் பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா தனது விக்கெட்டை இழந்தார். அவர் 26 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 43 ரன்களில் ஆட்டமிழந்தார்.

MS Dhoni

இறுதியாக ரிச்சர்டு கிளீசன் 2 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த சிஎஸ்கே 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் தான் தோனியி 9ஆவது பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: தோனி 9ஆவது வரிசையில் பேட்டிங் செய்ய வருவதற்கு பதிலாக போட்டியில் விளையாடாமல் இருந்திருக்கலாம். அவரைத் தவிர பிளேயிங் 11ல் வேறு ஒரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கலாம்.

Punjab Kings vs Chennai Super Kings, 53rd Match

தோனிக்கு முன் ஷர்துல் தாக்கூர் வந்தார். ஆனால், தோனி போன்று அவரால் ஷாட்டுகள் அடிக்க முடியாது. அணிக்கு ரன்கள் தேவை எனும் போது தோனி முன் கூட்டியே களமிறங்கி விளையாட வேண்டும். சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி வெற்றி பெற்றாலும், நான் தோனியை விமர்சனம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!